இணையத்தில் புது முயற்சி .. மஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” திறமைக்கான ஒரு தளம் !

கொச்சின் : நடிகை மஞ்சிமா மோகனின் திறமை வாய்ந்த நடிப்பு அவரது அனைத்து படங்களிலும் கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது. மிககுறுகிய கால திரைப்பயணத்தில் அவர் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் மிக இயல்பாக ரசிகர்களுடன் பழகும், அவரது பண்பு, அவருக்கு உச்ச எண்ணிக்கையில் ரசிகர்களை பெற்றுத்தரும் ஒரு காரணியாக இருக்கிறது.

தற்போது அவர் தனித்துவமிக்க ஒரு புதிய பயணத்தில், நல்ல திறமைகளை ஊக்கம் தந்து முன்னிறுத்தும் "ஒன் இன் எ மில்லியன்" (பத்து லட்சத்தில் ஒருவர் - one in a million) எனும் தளத்துடன் வந்திருக்கிறார்.

வழக்கத்துக்கு மாறாக

வழக்கத்துக்கு மாறாக

"ஒன் இன் எ மில்லியன்" (பத்து லட்சத்தில் ஒருவர் - one in a million) தளத்தை, மிகச்சிறந்த திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு தான் ஆரம்பித்தேன் என்று கூறிய அவர், இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன்னர் தான் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்ததாகவும் அதில் நடத்தப்படும் போட்டிகள் வழக்கமானதாக இருக்ககூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார்

பதிவேற்றி பாராட்டுக்களை

பதிவேற்றி பாராட்டுக்களை

இந்த தளம் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் குழுமமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் இக்குழுமத்தில் திறமையாளர்கள் கைவினை செயல், நடனம், இசை, பாடல் என தங்கள் திறமைகளை, பதிவேற்றி பாராட்டுக்களை பெறலாம் என்றும் பல திட்டங்கள் அறிமுகம் செய்ய பட உள்ளது

சமூக சூழல்

சமூக சூழல்

இந்த தளம் ஓர் இரவில் நடந்த மாற்றம் கிடையாது. தனது கல்லூரி நாட்கள் முதலாகவே இந்த தளம் பற்றிய எண்ணம் தன் மனதில் இருந்தது என்றும் உலகமே எதிர்மறைதன்மையில் இயங்கும் இந்த சூழலில் அனைவரிடத்திலும் நேர்மறைத்தன்மையை வளர்க்க இந்த ஏற்பாடு மிகச்சிறந்ததாக இருக்கும் என்றும் நினைத்து பல பெரிய முயற்ச்சிகள் மேல்கொள்கிறார் மஞ்சிமா

Recommended Video

'Jayam' Suman Shetty யின் தற்போதைய நிலை? | 7G Rainbow Colony
பெருமை

பெருமை

இச்சூழல் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் இதனை தொடர்ந்து நடத்த போவதாகவும் இந்த "ஒன் இன் எ மில்லியன்" (பத்து லட்சத்தில் ஒருவர் - one in a million) தளத்தின் மிக முக்கிய குறிக்கோள் வயது வரம்பின்றி அனைத்து திறமைகளையும், அனைவரையும் பங்கு கொள்ள வைப்பதே ஆகும் என்றும் மிகவும் பெருமையாக சொல்லி வருகிறார் .இந்த கேரளத்து பைங்கிளி எடுத்திருக்கும் இந்த இணையதள முயற்ச்சி வெற்றி பெற பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பல சினிமா பிரபலங்களும் இந்த தளத்தில் பலரை உற்சாக படுத்த வர இருக்கிறார்கள் என்று சொல்ல படுகிறது . நல்ல முயற்ச்சிகளையும் நல்ல திறமைசாலிகளையும் கண்டிப்பா இந்த குழு வரவேற்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X