கர்ப்பமா இருக்கேன்னு கலாய்க்கிறாங்க.. ரொம்பவே கலங்கி போயிட்டேன்.. மஞ்சிமா மோகன் ஓபன் டாக்!

சென்னை: சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சிமா மோகன், நவரச நாயகன் கார்த்தியின் வீட்டுக்கு மருமகளாக மாறியுள்ளார். நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மஞ்சிமா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணத்தின் போது தன்னை கஷ்டப்படுத்திய விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

மலையாள திரைப்படங்களில் நிவின் பாலி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மஞ்சிமா மோகன் நடித்த பல படங்கள் ஹிட் அடித்த நிலையில், தமிழிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Manjima Mohan talks about netizen trolls

1997ம் ஆண்டு வெளியான கலியூஞ்சல் எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மஞ்சிமா பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மலையாள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். நிவின் பாலியின் ஒரு வடக்கன் செல்ஃபி படத்தில் ஹீரோயினாக அவர் அறிமுகமான நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு கிடைத்தனர்.

சிம்பு பட ஹீரோயின்: "தள்ளிப்போகாதே.. தள்ளிப்போக சொல்லாதே" என சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் இவருக்காகத்தான் சிம்பு உருகியிருப்பார். அந்த படத்துக்குப் பிறகு சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், தேவராட்டம், துக்ளக் தர்பார், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிம்பு நடித்த பத்து தல படத்தில் அவருடன் இணைந்து நடித்த கெளதம் கார்த்திக்கை காதலித்து வந்த மஞ்சிமா மோகன் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

கணவர் கெளதம் கார்த்திக்: தேவராட்டம் படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்த நிலையில், இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். ரகசியமாக இருந்த காதல் இரு வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தெரிய வர இருவருக்கும் 2022ம் ஆண்டு திருமணத்தையும் நடத்தி முடிந்தனர்.

கர்ப்பமாக இருக்கேன்னு கலாய்க்கிறாங்க: திருமணம் ஆகி பெரிதாக சினிமாவிலும் நடிக்காமல் இருந்து வரும் மஞ்சிமா மோகன் இன்னமும் குழந்தையை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வரவில்லை. தனது உடல் எடை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மஞ்சிமா இருந்து வந்தாலும், தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவரை பாடி ஷேமிங் செய்து வந்த நிலையில், ஒரு சிலர் அவரது ஓவர் வெயிட்டை பார்த்து கர்ப்பமாக இருக்கீங்களான்னு போட்ட கமெண்ட் தன்னை கதறி அழ வைத்து விட்டது என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

முழு சப்போர்ட்: 10 பேர் நல்லா கமெண்ட் பண்ணா 2 பேர் மோசமா கமெண்ட் பண்ணுவாங்கன்னு தெரியும். நாம அதெல்லாம் ஃபேஸ் பண்ணிடுவோம். ஆனால், வீட்டில் உள்ள பெரியவங்க அந்த கமெண்ட்டுகளை பார்த்தால் ரொம்பவே கஷ்டமாகி விடும். சில சமயங்களில் கெளதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என்று கூட எண்ணி வருத்தப்பட்டுள்ளேன். தனியாக நாம கஷ்டப்படுறதை விட இன்னொருவரையும் இப்போ சேர்த்து கஷ்டப்படுத்துறோமோ என்கிற கில்ட்டே வந்துடுச்சு.

ஆனால், எனக்கு கிடைத்துள்ள பார்ட்னர் ரொம்பவே சப்போர்ட் செய்து வரும் நிலையில், சோஷியல் மீடியா புல்லிங்கை எல்லாம் பொருட்படுத்தாமல் நகர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டேன் எனக் கூறியுள்ளார். கூடிய சீக்கிரமே மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X