பச்சை நிறமே பச்சை நிறமே.. பச்சை உடையில் பப்ளியாக போஸ் கொடுத்த மஞ்சிமா மோகன்!

சென்னை: மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன்

அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு இப்பொழுது தமிழில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தவாறு பப்ளி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் மஞ்சிமா மோகன் இப்பொழுது பச்சை உடையில் பப்ளியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.

கதாநாயகியாக அறிமுகமானார்

கதாநாயகியாக அறிமுகமானார்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த நடிகை மஞ்சிமா மோகன் அதன்பிறகு ஒரு வடக்கன் செல்பி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கும் வருகை தந்த மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா அறிமுகப் படமாக அமைந்தது.

முதல் படத்திலேயே ரசிகர்களின் ஃபேவரைட்

முதல் படத்திலேயே ரசிகர்களின் ஃபேவரைட்

இயக்குனர் கெளதம் மேனன் சிம்பு கூட்டணியில் முதல் முறையாக வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மாபெரும் வெற்றிபெற்ற சூழலில் அதைத் தொடர்ந்து கௌதம் மேனன் சிம்பு கூட்டணியின் இரண்டாவது முறையாக இணைந்த அச்சம் என்பது மடமையடா வெற்றி பெற்றது. இதில் கதாநாயகியாக நடித்து மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் முதல் படத்திலேயே ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாகவும் மாறினார்

விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்து

விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்து

சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் என தொடர்ந்து ஹீரோயின் கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த மஞ்சிமா மோகன் முதல்முறையாக தங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த திரைப்படம் துக்ளக் தர்பார். விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்து இருப்பார் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது ஆனால் எதிர்பார்த்த அழகிற்கு இப்படம் ரசிகர்களை கவரவில்லை தோல்வியை தழுவியது.

பப்ளி ஹீரோயின்களை ரொம்பவே பிடிக்கும்

பப்ளி ஹீரோயின்களை ரொம்பவே பிடிக்கும்

கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக மஞ்சிமா மோகன் நடித்து அசத்தியிருப்பார். பொதுவாக தமிழ் ரசிகர்களுக்கும் பப்ளி ஹீரோயின்களை ரொம்பவே பிடிக்கும் அந்த வகையில் மஞ்சிமா மோகனை தமிழ் ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

பப்ளியாக க்யூட் போஸ்

பப்ளியாக க்யூட் போஸ்

பல படங்களில் கதாநாயகியாக நடித்த போதும் இன்று வரை கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்து வரும் மஞ்சிமா மோகன் இப்பொழுது பச்சை உடையில் பப்ளியாக போஸ் கொடுத்துள்ள க்யூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X