»   »  சிம்புவைத் தொடர்ந்து விஷாலுடன் 'ரொமான்ஸ்' பண்ணப்போகும் மஞ்சிமா மோகன்?

சிம்புவைத் தொடர்ந்து விஷாலுடன் 'ரொமான்ஸ்' பண்ணப்போகும் மஞ்சிமா மோகன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சண்டக்கோழி 2'வில் விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

11 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற 'சண்டக்கோழி' படத்தின் 2 வது பாகத்திலும் விஷாலே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

லிங்குசாமி இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும், ஒளிப்பதிவாளராக மதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Manjima Romance with Vishal in Sandakozhi 2

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஷால் தற்போது சுராஜின் 'கத்திச்சண்டை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் அவர் சண்டக்கோழியின் 2 வது பாகத்தில் நடிக்கவுள்ளார்.

அறிமுகமான 'அச்சம் என்பது மடமையடா' இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மஞ்சிமா ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Manjima Mohan Next Romance with Vishal in Sandakozhi 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil