ஜீவனாம்சம் வேண்டாம்… மஞ்சுவாரியர் முடிவு
திருவனந்தபுரம்: கணவர் திலீப் இடமிருந்து எந்தவித ஜீவனாம்சமும் கேட்கப் போவதில்லை என்று மஞ்சுவாரியர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் கணவர் தன்பெயரில் வாங்கிய ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை திருப்பிக்கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.
உதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய திலீப், 1998ம் ஆண்டு அப்போது முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

நட்சத்திர தம்பதிகள்
மலையாளத் திரையுலகில் அழகான நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வந்தவர்கள் திலீப் மற்றும் மஞ்சுவாரியர்.

விவாகரத்து வழக்கு
16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் இப்போது பிரிந்து விட்டார்கள். தற்போது இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இது மலையாளத் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது.

ரூ.80 கோடி சொத்து
இப்போது மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்க வந்து விட்டார். இதனிடையே ஒன்றாக வாழ்ந்த போது மஞ்சு வாரியர் பெயரில் திலீப் வாங்கிய சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மஞ்சு வாரியர் திலீப்பிடமே திருப்பிக் கொடுத்துவிட முடிவெடுத்து விட்டாராம்.

ஜீவனாம்சம் வேண்டாம்
அதே சமயம் திலீப்பிடமிருந்து எந்தவிதமான ஜீவனாம்சத் தொகையையும் பெறுவதில்லை என மஞ்சு முடிவெடுத்திருக்கிறாராம்.

எதுவும் தேவையில்லை
முதலில் மஞ்சுவின் அப்பா சுமார் 15 கோடி ரூபாயைக் கேட்டுப் பெறலாம் எனச் சொல்லி வந்தாராம். ஆனால், அதெல்லாம் தேவையில்லை என மஞ்சு சொன்னதாகத் தெரிகிறது.

வித்தியாசமான நடிகை
முன்னாள் கணவரிடமிருந்து எந்த சொத்தும் வாங்காமல் தனியாக வாழ்ந்து பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்று மஞ்சு நினைக்கிறாராம். இந்தக் காலத்தில் முன்னாள் கணவனிடமிருந்து முடிந்த அளவிற்கு எவ்வளவு சொத்துக்களை அபகரிக்க முடியும் என்று நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் மஞ்சு வாரியர் உண்மையாகவே வித்தியாசமான பெண்தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











