ஆத்தாடி, எவ்வளவு வருஷ கனவு... ஒரு வழியா இப்ப நனவாகுது... ஓவர் மகிழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியர்
கொச்சி: தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது நடிகை மஞ்சு வாரியர் மகிழ்ச்சிப் பொங்கத் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார்.
Recommended Video
கடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பின், மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

ஜோதிகா நடிப்பில்
15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது. இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை அசுரன் மூலம் நிறைவேறியது.

பச்சையம்மாள்
இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார் மஞ்சு வாரியர். 'தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கதைகள் வருகிறது. ஆனால் அசுரனில் கிடைத்ததை போல, சிறந்த கேரக்டர்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்' என்று கூறியிருந்தார்.

மம்மூட்டி ஜோடியாக
இதற்கிடையே அவர் மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்கிறார். மம்மூட்டியுடன் அவர் நடிப்பது இதுவே முதன்முறை. இது பல வருட கனவு என்றும் அவர் கூறியிருந்தார். அறிமுக இயக்குனர் ஜோபின் டி.சாக்கோ இயக்கும் அந்தப் படத்துக்கு த பிரீஸ்ட் என்று டைட்டில் வைத்துள்ளனர். கிரைம் திரில்லர் படமான இதை அன்டோ ஜோசப், உன்னிகிருஷ்ணன், வி.என்.பாபு தயாரிக்கின்றனர்.

கனவு நனவாகிறது
இதன் ஷூட்டிங் கேரளாவில் நேற்று தொடங்கியது. அப்போது நடிகர் மம்மூட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மஞ்சுவாரியர், அதை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், என் கனவு நனவாகிறது. நன்றி மம்மூக்கா என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











