துணிவு படத்தில் மஞ்சு வாரியருக்கும் இவ்வளவு சம்பளமா?

சென்னை: துணிவு படத்தில் நடிப்பதற்காக நடிகை மஞ்சு வாரியர் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து பணியாற்றிவந்த அஜித் வினோத்துடன் இணைந்தார். சதுரங்க வேட்டை, தீரன் என முதல் இரண்டு படங்களிலும் தன்னை பெரிதாக நிரூபித்தவர் வினோத் என்பதால் அஜித்துடன் அவர் கூட்டணி அமைக்கிறார் என விஷயம் தெரிந்தவுடன் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றனர். மேலும் அஜித்துடன் இணைந்த வினோத் செய்யப்போவது தரமான சம்பவமாக இருக்கும் எனவும் நம்பிக்கை கொண்டனர்.

பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை

பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை

முதல் படமே பிங்க் படத்தின் ரீமேக்காக அமைந்தது. ஆனால் தீரன், சதுரங்க வேட்டை மாதிரி வேறு ஒரு கதையைத்தான் வினோத் முதலில் அஜித்திடம் கூறியிருக்கிறார். இருப்பினும் சமூக அக்கறையுள்ள படத்தை செய்ய ஆசைப்பட்டிருந்த அஜித் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை உருவாக்கினார் ஹெச்.வினோத். இந்தப் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

வலிமையில் சறுக்கிய கூட்டணி

வலிமையில் சறுக்கிய கூட்டணி

இதனையடுத்து மீண்டும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி அமைந்தது. இந்த முறை ரீமேக்காக இல்லாமல் வினோத்தின் சொந்த கதை என்று முடிவானது. அதன்படி படத்துக்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் அஜித், ஹியுமா குரேஷி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஹெச்.வினோத் ரசிகர்களூம் ஏமாற்றமடைந்தனர்.

துணிவு படத்தில் பட்டையை கிளப்பிய கூட்டணி

துணிவு படத்தில் பட்டையை கிளப்பிய கூட்டணி

தொடர்ந்து மூன்றாவது முறையாக இதே கூட்டணி மீண்டும் அமைந்தது. படத்துக்கு துணிவு என்று பெயரிடப்பட்டிருந்தது. வங்கியை கொள்ளையடிக்கும் கும்பல் பற்றியும், மக்களிடம் கொள்ளையடிக்கும் வங்கி பற்றியும் படம் உருவாகியிருந்தது. அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சிறப்பான வரவேற்பைப் பெற்று ஹிட்டும் ஆகிவிட்டது.

துணிவு படத்துக்கு மஞ்சு வாரியர் பெற்ற சம்பளம்

துணிவு படத்துக்கு மஞ்சு வாரியர் பெற்ற சம்பளம்

இந்நிலையில் துணிவு படத்தில் நடித்ததற்காக நடிகை மஞ்சு வாரியர் பெற்ற சம்பளம் குறித்த தகவல் ஒன்று கோலிவுட்டில் தீயாய் பரவிவருகிறது. அதன்படி துணிவு படத்தில் நடிப்பதற்காக மஞ்சு வாரியர் தலா 90 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X