வாவ் அற்புதம்! லாக்டவுனில் கற்கும் ஹீரோயின்கள்.. மஞ்சு வாரியர் திறமை கண்டு வியந்த கீர்த்தி சுரேஷ்

By

கொச்சி: இந்த லாக்டவுன் நேரத்தில் அந்தப் பாரம்பரிய இசைக்கருவியை வாசிக்கக் கற்றுள்ளார் பிரபல நடிகை மஞ்சு வாரியர்.

Recommended Video

மஞ்சு வாரியர் திறமை கண்டு வியந்த கீர்த்தி சுரேஷ்! - வீடியோ

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

மீண்டும் நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

பலவருட கனவு

பலவருட கனவு

இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார், மஞ்சு வாரியர். இதற்கிடையே அவர் மலையாள படத்தில் முதன்முறையாக மம்மூட்டி ஜோடியாக, த பிரீஸ்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இது பல வருட கனவு என்றும் அவர் கூறியிருந்தார்.

ஸ்டைலாக மாற்றினார்

ஸ்டைலாக மாற்றினார்

அவர் நடிப்பில், மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. அடுத்து, ரஞ்சித் கமலா சங்கர் -ஷாலி வி இயக்கும் சதுர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தனது அண்ணன் மது வாரியர் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் படவெட்டுப் படத்துக்காக, தனது தோற்றத்தை ஸ்டைலாக மாற்றியுள்ளார்.

வீணை வாசிக்க

வீணை வாசிக்க

லாக்டவுன் முடிந்ததும் இந்தப் படங்களின் பணிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தை உருப்படியாகப் பயன்படுத்த நினைத்த நடிகை மஞ்சு வாரியர், வீணை வாசிக்கக் கற்றுள்ளார். வீணையை வாசித்து அவர், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு, நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் வரை தோல்வி அடையவதில்லை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இதையடுத்து மலையாள நடிகர், நடிகைகள் ஓடி வந்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ், ஆ, சேச்சி அற்புதம் என்று தெரிவித்துள் ளார். மேலும் நடிகர் ஜெயசூர்யா, நடிகை பானு உட்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஏராளமான ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

நடிப்பு பயிற்சி

நடிப்பு பயிற்சி

நடிகை சமந்தா, பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரனிடம் (Helen Mirren) நடிப்பு பயிற்சிப் பெற்று வருகிறார். ஹெலன் மிர்ரன், த குயின் படத்தின், இரண்டாம் எலிசபெத் வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக, ஆஸ்கர் விருது பெற்றவர். மாஸ்டர்கிளாஸ் என்ற அமெரிக்க வெப்சைட் மூலம் இந்த பயிற்சியை அவர் மேற்கொள்கிறார் சமந்தா. மேலும் சில நடிகைகள் குறும்படங்கள் இயக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X