என் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய ஆண் அவர்தான்... மஞ்சு வாரியர் ஓபன் டாக்
Recommended Video
சென்னை: தன் வாழ்க்கையில் அதிக ஆதிக்கம் செலுத்திய ஆண் யார் என்பதை நடிகை நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில் 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரிலீஸ் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர்.
இந்நிலையில் கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், உங்கள் வாழ்க்கையில், ஆதிக்கம் செலுத்திய ஆண் யார் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், எல்லோர் வாழ்க்கையில் தந்தைக்கு சிறந்த இடம் உண்டு. எனக்கும் என் அப்பாதான் எல்லாம். என் வாழ்க்கையில் அதிக செல்வாக்கான மனிதரும் ஆதிக்கம் செலுத்தியவரும் அவர்தான். அவர் இழப்பு என்னால் தாங்கிக்கொள்ள முடியாதது. நிவர்த்தி செய்ய முடியாதது என்றார்.


Click it and Unblock the Notifications











