தமிழை அடுத்து அந்த மொழியிலும் அறிமுகமாக இருக்கிறாராம் நடிகை மஞ்சு வாரியர்.. அம்மாவாக நடிப்பாரா?
கொச்சி: அசுரன் மூலம் தமிழில அறிமுகமான மஞ்சுவாரியர், இப்போது அந்த மொழியிலும் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த மொழி நடிகை, இந்த மொழி நடிகை என்று குறிப்பிட்ட காலம் இப்போது இல்லை. எல்லாம் மாறும்போது இதுவும் மாறக்கூடாதா?
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

மஞ்சு வாரியர்
டாப்ஸி, ராதிகா ஆப்தே, பிரியாமணி, லட்சுமி ராய், பூஜா ஹெக்டே உட்பட பல நடிகைகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். அந்த லிஸ்டில் இப்போது லேட்டஸ்டாக இணைய இருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப் படும் மஞ்சு, நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார்.

தமிழில் நடிக்கும் ஆசை
கடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பின், மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓல்ட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது. இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை அசுரன் மூலம் நிறைவேறியது.

பச்சையம்மாள்
வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக பச்சையம்மாள் என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இப்போது, த பிரீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மம்மூட்டியுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது. தனது சகோதரர் மது வாரியர் இயக்கும் படத்திலும் நிவின் பாலியின் படவெட்டு என்ற படத்திலும் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்.

ஹீரோவின் அம்மா
இதையடுத்து கன்னடத்தில் அறிமுகமாக இருக்கிறார் மஞ்சு வாரியர். கன்னட இயக்குனர் நாகராஜ் சோமயாஜியின் அடுத்த படத்தில் யோகேஷ் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு அகடகடா என்று டைட்டில் வைத்துள்ளனர். படத்தில் ஹீரோவின் அம்மா கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறதாம். அதனால் மஞ்சு வாரியர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

முதல் கன்னட படம்
இதனால் நடிகை மஞ்சு வாரியரிடம் அடுத்த வாரம் கதை சொல்ல இருக்கிறார், இயக்குனர் நாகராஜ் சோமயாஜூ. அவருக்கு கதைப் பிடித்து ஓகே சொன்னால், மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் கன்னட படமாக இது இருக்கும். மஞ்சு வாரியர் ரீ என்ட்ரி ஆனாலும் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கவில்லை. அதனால் அம்மாவாக நடிக்க சம்மதிப்பாரா என்பது டவுட் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











