Manju Warrier: ஆத்தாடி.. 44 வயசுல இப்படி பண்றாரே.. மஞ்சு வாரியரை பார்த்து மிரண்டு போன சாய் பல்லவி!
சென்னை: நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் வெளியிட்ட வொர்க்கவுட் போட்டோவை பார்த்து சாய் பல்லவி உள்ளிட்ட பல இளம் நடிகைகள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் மஞ்சு வாரியர் செம மாஸான ரோலில் நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

44 வயதிலும் செம ஃபிட்: நடிகை மஞ்சு வாரியர் இன்னமும் சீனியர் நடிகை ஆகாமல் டாப் ஹீரோயினாக வலம் வர காரணமே இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது தான்.
அஜித்தின் துணிவு படத்தில் எல்லாம் சின்னப் பொண்ணாகவே மாறி நடித்திருந்த மஞ்சு வாரியர் தொடர்ந்து ஏகப்பட்ட க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டு இளம் நடிகைகளுக்கு கடும் போட்டியாக மாறி உள்ளார்.

என்னவொரு ஃபிளெக்ஸிபிள்: தனது இரு கால்களையும் தரையில் இந்த மூலைக்கு ஒன்றும் அந்த மூலைக்கு ஒன்றும் விரித்தபடி வொர்க்கவுட் செய்துள்ள புதிய போட்டோவை போட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் மஞ்சு வாரியர்.
இந்த வயதில் இப்படியெல்லாம் உடம்பு வளையுமா என ரசிகர்களை விட பல இளம் நடிகைகளே வாய் பிளந்து கமெண்ட் போட்டுள்ளனர்.

ஷாக்கான சாய் பல்லவி: நடிகை மஞ்சு வாரியர் இந்த அளவுக்கு உடம்பை வளைத்து வொர்க்கவுட் செய்வதை பார்த்து நடிகை சாய் பல்லவி அப்படியே ஷாக் ஆகி விட்டார். வாவ் என கமெண்ட் போட்டு ஃபயர் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார்.
பீஸ்ட், டாடா படத்தில் நடித்த நடிகை அபர்ணா தாஸ், தொகுப்பாளினி டிடி நீலகண்டன் என பல பிரபலங்களும் மஞ்சு வாரியரின் இந்த வொர்க்கவுட் போட்டோவுக்கு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
தமிழில் அசுரன், துணிவு என படங்களை தேர்வு செய்து நடித்து வரும் மஞ்சு வாரியர் நடிகர் அஜித்தை போலவே பைக் டூர்களையும் செல்ல ஆரம்பித்து இருக்கிறார். மலையாளத்தில் தொடர்ந்து உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications











