உலகம் பெருசு.. நேரம் குறைவு.. அஜித் கூட சேர்ந்து மஞ்சு வாரியரும் இப்படி கிளம்பிட்டாரே!

சென்னை: நடிகை மஞ்சு வாரியர் தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு ஒரு அழகான கேப்ஷனையும் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக வலம் வருபவர் மஞ்சு வாரியர்.

தனுஷின் அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியர் இந்த ஆண்டு அஜித்தின் துணிவு படத்தில் தூள் கிளப்பி இருந்தார்.

44 வயசு ஆகுது

44 வயசு ஆகுது

1995ல் வெளியான சாக்‌ஷியம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் மஞ்சு வாரியர். மோகன்லால், மம்மூட்டி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர், நடிகர் திலீப்புடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். பின்னர் நடிகர் திலீப்பையே காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திலீப்புடன் விவாகரத்து

திலீப்புடன் விவாகரத்து

திலீப் மற்றும் மஞ்சு வாரியருக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு தனது கணவர் திலீப்பை விவாகரத்து செய்த மஞ்சு வாரியர் தொடர்ந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார். நடிகை காவ்யா மாதவனை திலீப் திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் நடிகை ஒருவரின் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார்.

அசுரனில் அறிமுகம்

அசுரனில் அறிமுகம்

பல ஆண்டுகளாக மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த மஞ்சு வாரியர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் கடந்த 2019ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிப்புக்கு தீனிப் போடும் அளவுக்கு சரியான கதாபாத்திரம் கிடைக்க மிரட்டி இருந்தார் மஞ்சு வாரியர்.

அஜித்துடன் இணைந்து

அஜித்துடன் இணைந்து

அசுரன் படத்திற்கு பிறகு அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்திருந்தார் மஞ்சு வாரியர். டூயட் பாடல்கள் இல்லை என்றாலும், ஹுமா குரேஷிக்கு வலிமை படத்தில் கொடுத்ததை போலவே செம மாஸான கதாபாத்திரத்தை இயக்குநர் எச். வினோத் மஞ்சு வாரியருக்கு வடிவமைத்திருந்தார்.

அஜித்துடன் பைக் டூர்

அஜித்துடன் பைக் டூர்

பைக் டூர், ஊர் சுற்றுவது என எதிலுமே ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த மஞ்சு வாரியர் துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் போது ஏகப்பட்ட விஷயங்களை கற்றுக் கொண்டார். உலகம் முழுவதும் சுற்றுலா செய்யும் அஜித்தின் ஆசை இவருக்கும் தற்போது தொற்றிக் கொண்டது போல, சமீபத்தில் BMW பைக் ஒன்றையும் மஞ்சு வாரியர் வாங்கி இருந்தார்.

தாஜ்மகால் அருகே

தாஜ்மகால் அருகே

துணிவு திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மஞ்சு வாரியருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. மலையாளத்தில் வெளியான ஆயிஷா படமும் அவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது. முதல் முறையாக பாலிவுட்டில் அம்ரிகி பண்டித் எனும் படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியர் தற்போது தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே அவர் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

உலகம் பெருசு.. நேரம் குறைவு

உலகம் பெருசு.. நேரம் குறைவு

தாஜ்மகால் அருகே தங்கம் போல ஜொலிக்கும் மஞ்சு வாரியர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து அதற்கு சூப்பராக ஒரு கேப்ஷனாக So much world, so little time என பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் மஞ்சு வாரியர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X