ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... 22 வருஷத்துக்குப் பிறகு பழைய ஹாஸ்டலுக்கு விசிட் அடுத்த ஹீரோயின்

By

சென்னை: 22 வருடத்துக்கு முன் சென்ற ஹாஸ்டலுக்கு இப்போது மீண்டும் சென்ற ஹீரோயின், தனது மலரும் நினைவுகளை தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பின், மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

Recommended Video

பாட்டு பாடி நடனம் ஆடி அசத்திய மஞ்சு வாரியர்

15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது.

பச்சையம்மாள்

பச்சையம்மாள்

தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு 'அசுரன்' படம் மூலம் நிறைவேறியது. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார் மஞ்சு வாரியர். அவரது அமைதியான நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் மஞ்சு வாரியர்.

குணமானது காயம்

குணமானது காயம்

அவர் இப்போது நடிக்கும் மலையாளப் படம், சதுர்முகம். இதை ரஞ்சித் கமலா சங்கர் -ஷாலி வி இயக்குகின்றனர். ஹாரர் திரில்லர் படமான இதில் தொழிலதிபராக நடிக்கிறார் மஞ்சு. இதன் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த படப்பிடிப்பில் காயம் அடைந்திருந்தார் மஞ்சு.

பிரணயவர்ணங்கள்

பிரணயவர்ணங்கள்

இப்போது காயம் குணமாகி படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் திருவனந்தபுரம் அருகே நடந்துவருகிறது. இதற்கிடையே, மஞ்சுவாரியர் நடித்து 1998 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம், பிரணயவர்ணங்கள். சிபிமலயில் இயக்கி இருந்த இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சுரேஷ்கோபி, திவ்யா உண்ணி, பிஜூமேனன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

22 வருடத்துக்குப் பின்

22 வருடத்துக்குப் பின்

வித்யாசாகர் இசை அமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் அப்போது சூப்பர் ஹிட்டாகின. நட்பு, காதல், கல்லூரி வளாகம் என சுற்றிய படத்தின் கதையில் முக்கிய இடம் பிடித்த லொகேஷன் ஒரு ஹாஸ்டல். இந்த ஹாஸ்டலுக்கு 22 வருடத்துக்குப் பிறகு இப்போது சதுர்முகம் படத்தின் ஷூட்டிங்குக்காகச் சென்றுள்ளார் மஞ்சு வாரியர்.

படிகட்டுகளில்

படிகட்டுகளில்

பழைய படத்தில் அவர் ஹாஸ்டல் படிகட்டுகளில் ஏறிவருவது போன்றே, இப்போதும் ஏறிய மஞ்சு, அந்த இரண்டு விஷூவலையும் ஒன்றாக்கி பின்னணியில் அந்தப் படத்தின் பாடலை ஓடவிட்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 22 வருடத்துக்கு அதே ஹாஸ்டலில் அதே படியில் இன்று... என்று மஞ்சு குறிப்பிட்டுள்ள இந்த வீடியோவை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

Read more about: manju warrier
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X