வில்லியாக மிரட்டிய சமந்தா.. வாயாற புகழ்ந்த பாலிவுட் ஹீரோ.. அதுக்கு சமந்தா என்ன சொன்னாங்க தெரியுமா?
Recommended Video
மும்பை: தமிழ், தெலுங்கு என கலக்கி வந்த நடிகை சமந்தா தற்போது முதன்முறையாக வெப் சீரிஸ் மூலம் பாலிவுட்டிலும் கால் தடம் பதிக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான 'தி ஃபேமிலி மேன்' வெப்சீரிஸ் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் மிரட்டல் வில்லியாக சமந்தா நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமந்தாவின் நடிப்பை வாயாற புகழ்ந்துள்ளார் மனோஜ் பாஜ்பாய்.

தமிழில்
சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் பல விருது விழாக்களில் விருதுகளை குவித்து வருகிறது. வேம்பு எனும் கதாபாத்திரத்தில் வித்தியாசமான ரோலில் செம்ம தில்லாக நடித்து சமந்தா அசத்தியிருந்தார்.

டபுள் ஹிட்
ஆனால், தமிழில் சூப்பர் டீலக்ஸ் படம் வசூல் ரீதியாக வெற்றியை பதிவு செய்யவில்லை. அதே நேரத்தில் தெலுங்கில் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மஜிலி மற்றும் ஓ பேபி படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

ஜானு
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சமந்தா மற்றும் சர்வானந்த் நடித்து வருகின்றனர். ஜானு என்ற டைட்டிலில் இயக்குநர் பிரேம் குமாரே தெலுங்கிலும் அந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழில் த்ரிஷா நடித்த ஜானு ரோலில் தெலுங்கில் சமந்தா பட்டையை கிளப்பியுள்ளாராம்.

வில்லி
சியான் விக்ரம், சமந்தா நடிப்பில் வெளியான பத்து என்றதுக்குள்ள படத்தில் வில்லியாக சமந்தா நடித்திருந்தார். அதற்கு பிறகு தற்போது மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகி வரும் தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறாராம் சமந்தா.

மனோஜ் பாஜ்பாய்
பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஜ் நிதிமுரு மற்றும் கிரிஷ்ணா டி.கே இணைந்து இயக்கி வரும் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்து விரைவில் ஸ்ட்ரீமிங் ஆக காத்திருக்கிறது.
நெகிழ்ச்சி பதிவு
தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ள நிலையில், அதுகுறித்த நீண்டதொரு நெகிழ்ச்சி பதிவை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தனது புதிய அனுபவம் குறித்து கூறியுள்ளார்.

சூப்பர் நடிப்பு
அவரது பதிவை பார்த்த மனோஜ் பாஜ்பாய், சூப்பரா நடிச்சிருக்கீங்க, உங்கக் கூட வேலை செஞ்சதில் ரொம்ப மகிழ்ச்சி என கமெண்ட் செய்தார்.

நடிப்பு கடவுள்
பாலிவுட்டின் சிறந்த நடிகரான மனோஜ் பாஜ்பாய் கமெண்டை பார்த்து ஆச்சர்யமடைந்த சமந்தா, நடிப்பு கடவுளுடன் நடிக்க செட்டில் தான் மிகவும் பயந்ததாகவும் கூறியுள்ளார். சமந்தாவின் இந்த பதிவுக்கு சுமார் 5 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications