அம்மா வேடத்தில் மந்த்ரா!
முன்னொரு காலத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மந்த்ரா இப்போது அம்மா வேடத்துக்கு மாறியுள்ளார். தெலுங்குப் படம் ஒன்றில் இளம் ஹீரோ ஒருவருக்கு அம்மாவாக நடிக்கப் போகிறாராம் மந்த்ரா.
ஆந்திர தேசம் தந்த அணல் சுந்தரி தான் மந்த்ரா. அருண்குமாருடன் நடித்த ப்ரியம் தான் மந்த்ராவின் முதல் படம். அதைத் தொடர்ந்து படு வேகமாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.மாபெரும் உடற்கட்டுடன் கிளாமரில் புகுந்து கலக்கி வந்த மந்த்ராவுக்குப் பின்னர் மார்க்கெட் இறங்குமுகமானது. இதனால் இடையில் அவரைக் காணவில்லை. ராசி என்ற தனது ஒரிஜினல் பெயரில் தாய் மொழியான தெலுங்குக்குப் போனார்.
பின்னர் அஜீத்தின் ரெட் படத்தில் குத்துப் பாட்டுக்கு படு கிளாமராக ஆடினார். அப்படியும் தமிழ் சினிமா அவருக்கு ரெட் கார்ப்பெட் விரிக்கவில்லை. அப்செட் ஆகிப் போன மந்த்ரா உதவி இயக்குனர் ஒருவரை திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
ஹைதாராபாத்திலேயே செட்டிலாகி விட்ட மந்த்ரா, இப்போது உடல் பெருத்து, இன்னும் பிரமாண்டமாகி குடும்பஸ்திரியாக மாறிப் போயுள்ளார். இந்த நிலையில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் இயக்குநர் ஒருவர் மந்த்ராவை அணுகி தனது படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இளம் ஹீரோ ஒருவருக்கு அம்மாவாக நடிக்கும் இந்த வாய்ப்பை விடாமல் ஏற்க முடிவு செய்துள்ளாராம் மந்த்ரா. கிளாமர் கன்னியாக தமிழ் ரசிகர்களையும், ராசி என்ற பெயரில் குடும்பப் பாங்கான வேடங்களில் தெலுங்கில் நடித்தும் அசத்திய மந்த்ரா, அம்மா வேடத்திலும் அசத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











