»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

வேலு பிரபாகரன் தான் எடுக்கத் திட்டமிட்டுள்ள படத்தில் நடிக்கக் கோரி மந்த்ராவை சந்தித்தார். சாமி ரோல்லநடிக்கனும் என்று சொன்னார். சான்ஸ் இல்லாமல் சும்மா இருந்த மந்த்ரா உடனே அட்வான்ஸை வாங்கியகையோடு ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார்.

படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்று பிரபாகரன் சொல்ல சாமி ரோல்ல கவர்ச்சியா என்று மந்த்ராஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டார். சாமி ரோல் கனவு காட்சி தான் என்று சொல்லிய பிரபாகரன் மீண்டும் மீண்டும்கவர்ச்சியிலேயே குறியாய் இருக்க, அதனால என்ன, காட்டிருவோம் என்று பெரிய மனசு காட்டினார் மந்த்ரா.

இதையடுத்து சூட்டிங் தொடர்பாக சில காஸ்ட்யூம்களுடன் மந்த்ராவிடம் வந்தார் பிரபாகரன். இந்த டிரஸ்போடுவீங்களா என்று கேட்டு மிகக் குட்டையான பாவாடையையும் ஒரு டைட் ஜாக்கெட்டையும் காட்டினார்.அதற்கும் மந்த்ரா தலையாட்டினார்.

ஆனால், அடுத்து பிரபாகரன் சொன்னதைக் கேட்ட மந்த்ராவுக்கு தலை சுற்றிவிட்டதாம். படத்தில் மொத்தம் 6கற்பழிப்பு காட்சிகள். அதில் எல்லாம் இந்த உடையோடு தான் நீங்க நடிக்கனும். கற்பழிப்புக் காட்சியை ரொம்பசெக்ஸியாகவும் நீளமாகவும் எடுக்கப் போறேன் என்றவர், சில ஸ்டில்களையும் கொடுத்து கிட்டத்தட்ட இந்தரேஞ்சுக்கு இருக்கும் என்று கூறிவிட்டுப் போனாராம்.

அதைப் பார்த்த மந்த்ராவுக்கு கை, கால் உதறிவிட்டதாம். கிட்டத்தட்ட மலையாள பிட் பட ரேஞ்சுக்கு தன்னைவைத்து படமெடுக்கப் போவதை அறிந்த மந்த்ரா உடனே வாங்கிய அட்வான்ஸை எடுத்துக் கொணடு போய்பிரபாகரனிடம் கொடுத்துவிட்டு படத்தில் இருந்தும் விலகிக் கொண்டார்.

அண்ணே, முன்பே எல்லா உண்மைகளையும் சொன்னதற்காக நன்றி. வேற நல்ல ரோல் ஏதாவது எடுத்தாசொல்லுங்க என்று கூறிவிட்டு வந்தாராம்.

வேலு பிரபாரன் டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொண்டாராம். வீண் வம்பு ஏதும் வளர்க்காமல், அதனால் என்னபரவாயில்லை என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். அடுத்து வேறொரு கற்பழிப்பு அழகியைத் தேடி வருகிறார்பிரபாகரன்.

Please Wait while comments are loading...