»   »  இனி நான் ஹீரோயின் அல்ல - மந்த்ரா!

இனி நான் ஹீரோயின் அல்ல - மந்த்ரா!

Subscribe to Oneindia Tamil

கல்யாணம்செய்து கொண்ட பிறகு, சந்தோஷத்துடன் வாழ்க்கை ஓடிக் கொண்டுள்ளது. அந்த சந்தோஷத்திலேயே உடம்பும்பெருத்து விட்டது. இனிமேல் என்னால் ஹீரோயினாக நடிக்க முடியாது என்று கூறியுள்ளார் நடிகை மந்த்ரா.

ப்ரியம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிகமானவர் மந்த்ரா. அதே படத்தில் தான் விஜயக்குமாரின் மகன்அருண்குமாரும் ஹீரோவாக அறிமுகமானார்.

லவ் டுடே, "தேடினேன் வந்தது என தமிழில் சின்னதாக ஒரு ரவுண்டு வந்த மந்த்ரா திடீர் என காதல் வதந்தியில் சிக்கினார்.அசோக் சாம்ராட் என்ற தயாரிப்பாளரை அவர் திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடித்தனம் நடத்துவதாக செய்திகள்வந்தன. மந்த்ரா இந்த செய்தியை மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை.

இந்த நிலையில் வாய்ப்புகளும் குறையவே ஹைதராபாத்திலேயே தங்கத் தொடங்கினார் மந்த்ரா. தமிழில் தான் வாய்ப்புகள்இல்லை என்றாலும் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த மந்த்ரா, சமீபத்தில் ஸ்ரீனிவாஸ் என்ற தெலுங்குப் படஉதவி இயக்குநரை திடீரென கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.

பிரபல இயக்குநரும், ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ண வம்சியின் உதவியாளர் தான் இந்த ஸ்ரீனிவாஸ்.திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் தனிக்குடித்தனத்தைத் தொடங்கியுள்ளார் மந்த்ரா. இப்போது அவர் படங்களில் அதிகமாகநடிக்கவில்லை. இருப்பினும் சத்யராஜின் சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் தலை காட்டி வருகிறார்.

என்ன திடீர் கல்யாணம்? என்று மந்த்ராவை கேட்டபோது, ஏக பெல்லாத்து ரெண்டு பெள்ளம் ஒத்து என்ற தெலுங்குப்படத்தின்போது தான் ஸ்ரீனிவாஸ் எனக்கு அறிமுகம் ஆனார்.

ஆரம்பத்தில் மோதலில் தொடங்கிய எங்களது அறிமுகம் பின்னர் நட்பாக மாறி, காதலில் முடிந்தது. அவர் தான் முதலில் காதலைச்சொன்னார். சிறிது யோசனைக்குப் பின் நான் காதலை ஏற்றுக் கொண்டேன்.

எங்களது காதலை அவர்கள் வீட்டார் உடனடியாக ஏற்றுக் கொண்டனர். எங்களது வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இதனால் குழப்பம்ஏற்பட்டு விடுமோ என்று பயந்த நான் அவசரம் அவசரமாக திருமணத்தை முடித்துக் கொண்டேன்.

எனது கணவர் திறமைசாலி, பெண்களை மதிப்பவர். சந்தோஷமாக இருக்கிறேன். அதனால் தான் முன்பை விட உடம்பு கொஞ்சம்கூடுதலாகவே உப்பி விட்டது. இனிமேல் ஹீரோயின் வேடத்தில் என்னால் நடிக்க முடியாது. மற்ற வேடங்களில் வேண்டுமானால்நடிப்பது குறித்து யோசிப்பேன் என்று கூறி நிறுத்தினார் மந்த்ரா.

எனவே ரசிகர்களே, அழகான மந்த்ராவை இனிமேல் அக்கா, அம்மா, மாமியார் வேடங்களில் எதிர்கொள்ள தயாராவோம்!

Read more about: manthra returns again
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil