»   »  மான் விழி மான்யா!

மான் விழி மான்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மான்யாவை தெரியுமா, மான்யா? நைனா படத்தில் அறிமுகமாகி இடையில்காணாமல் போய் அப்புறம் வெளியான குஸ்தி படத்தில் நடித்தாரே, அந்த மான் விழிமான்யாவுக்கு மாப்ளே பார்க்கிறார்களாம்.

மழமழவென, நல்ல செளுமையுடன் இருக்கும் மான்யாவுக்கு சொந்த ஊர் கேரளம்.அறிமுகம் ஆனது தெலுங்கில். அங்கு சில படங்களை முடித்து விட்டுமலையாளத்திற்கும் அப்படியே தமிழுக்கும் தாவினார். திடீரென இடையில் காணாமல்போய் விட்டார். மலையாளத்திலும் அவர் நடிக்கவில்லை, தமிழிலும்வாய்ப்பில்லாமல் இருந்தார்.

இடையில் எங்கே போனீர்கள் என்று கேட்டால், தெலுங்கிலும், கன்னடத்திலும்நிறையப் படங்கள் வந்ததால் அங்கு போய் விட்டேன். நான்கு தென்னிந்தியமொழிகளிலும் நடித்து விட்டேன்.

நான்கிலும் எனக்கு மிகவும் பிடித்தது மலையாளப் படங்கள் தான். காரணம் அங்குதான் எனக்கு நல்ல நல்ல கேரக்டர்கள் கொடுத்தார்கள். தெலுங்கிலும், கன்னடத்திலும்எனக்குப் பொருத்தமான ரோல் கொடுக்கவே இல்லை (அப்புறம் எதுக்குதெலுங்கிலேயே இத்தனை நாள் தொங்கினாரோ!).


தெலுங்கிலும், கன்னடத்திலும் கவர்ச்சிக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.அது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் மீண்டும் மலையாளம் மற்றும் தமிழ்திரையுலகுக்கு திரும்பி விட்டேன்.

தமிழில் சமீபத்தில் குஸ்தி செய்தேன். அடுத்த ஒரு புதுமுக ஹீரோவுடன் ஜோடிசேர்ந்து நடிக்கவுள்ளேன். படங்களில் நடிப்பதோடு, அஞ்சல் வழியில்பட்டப்படிப்பையும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்றார்.


நீண்ட காலமாக நடித்துக் கொண்டிருக்கும் மான்யாவுக்கு வயசு ஏறிக் கொண்டேபோகிறதாம். பார்க்க பப்பளபள என இருந்தாலும் சேச்சிக்கு வயது போய்க்கொண்டிருப்பதால் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

உங்க மம்மி, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாளேமே? என்று மான்யா வாயைபிடுங்கினோம்.


புன்னகைத்தவாறே, இன்னும் 2 வருடங்களுக்கு கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது என்று உள்ளேன். ஆனால் அம்மா மாப்பிள்ளை பார்க்கும் படலத்தைஆரம்பித்து விட்டார் என்று விளக்கினார்.

நடிகை ஒருவர் கல்யாணம் செய்து கொண்டு விட்டால் திரையுலகை விட்டே விலகவேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் இதில் மாறுபடஆசைப்படுகிறேன். நடிக்க வந்த பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டு வீட்டோடுஇருப்பது இயலாத காரியம்.


எனவே எனக்கு கல்யாணம் ஆனாலும் கூட திரையுலகில் தொடர்ந்து இருப்பேன். அதுகேமராவுக்கு முன்பாகவும் இருக்கலாம், பின்னாலும் இருக்கலாம். எப்படியோஇருப்பேன் என்கிறார்.
Read more about: manya to act after marriage

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil