»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

"நைனா" ஹீரோயின் மான்யா, ரொம்ப ஜாலியானவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே நமக்கும் உற்சாகம் பற்றிக் கொள்கிறது.

மான்யா பற்றி நிறைய சொல்லிக் கொண்டிருக்கலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கு.

பெங்களூரில் அவதரித்த இந்த அல்வாத் துண்டு, ஹைதராபாத்தில் படித்து, வளர்ந்தது. அப்பாவும், அம்மாவும், அக்காவும்டாக்டர்கள். இவரையும் டாக்டருக்குப் படிக்கச் சொன்னார்களாம். ஆனால் இலக்கியத்தின் மீதான காதலால் ரூட்டை மாற்றிக்கொண்டாராம். இப்போது இவர் ஆங்கில இலக்கிய மாணவி.

சினிமா வாசனையே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மான்யா சினிமாவுக்கு வந்ததே விளையாட்டாகத்தானாம். ஆனால் மிகக்குறுகிய காலத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார். தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில்நடித்துள்ள மான்யா, அதிகளவில் நடித்துள்ளது மலையாளத்தில்தான்.

இப்போது சில தெலுங்குப் படங்களும் அவருக்குக் கிடைத்துள்ளதாம். தமிழில் நைனா மட்டுமே. அதைத் தவிர்த்துஇப்போதைக்கு கையில் உள்ள படம் விண்ணைத் தேடி வருவாயா.

நைனாவில் மான்யாவின் கேரக்டர் அதிகம் பேசப்படுமாம். டைரக்டர் மனோ பாலா கையில் அடித்து சத்தியம் செய்கிறார்.

Read more about: chance, cinema, films, heroin, manya, movies, naina, songs, telugu
Please Wait while comments are loading...