»   »  எல்லாமே கவர்ச்சிதான்!

எல்லாமே கவர்ச்சிதான்!

Subscribe to Oneindia Tamil
சினிமா என்றாலே கவர்ச்சிதான். கிளாமர் தான் இங்கே ஜெயிக்கிறது என்று படுஎதார்த்தமாக பேசுகிறார் குஸ்தி நாயகி மான்யா.

குஸ்தியில் மான்யாவைப் பார்த்தவர்களுக்கு, அட எங்கேயோ பார்த்த முகமாகஇருக்கே என்று யோசிக்கத் தோன்றும். ரொம்ப காலத்திற்கு முன்பு நைனா என்றபடத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்தவர்தான் மான்யா.

மான்யா நாயுடு என்ற பெயரை மான்யா என்று சுருக்கி தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என நான்கு மொழிகளிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருந்த மான்யா,நீண்ட இடைவெளிக்குப் பிறகு குஸ்தி மூலம் மீண்டும் தமிழில் தலை காட்டினார்.

எங்கே போய்ட்டீங்க நைனா என்று மான்யாவை ஓரம் கட்டிக் கேட்டால், நைனா நல்லபடம் தான். நல்ல காமெடி அதில் இருந்தது. ஆனாலும் என்னவோ, படம் சரியாகபோகவில்லை. நானும் கவனிக்கப்படமால் போய் விட்டேன்.

இருந்தாலும், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் எனக்கு நிறைய வாய்ப்புகள்வந்தன. மூன்று மொழிப் படங்களிலும் பிசியாக இருந்தேன். அதனால்தான் தமிழில்நடிக்க ஆசையாக இருந்தாலும் நடிகக முடியாமல் போனது.

இப்போது குஸ்தியில் நல்ல கேரக்டர். படம் நன்றாக ஓடியுள்ளது. இதனால் தமிழில்புதிய வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனாலும் இங்கே டேட்ஸ் கொடுக்க முடியாதஅளவுக்கு மலையாள, தெலுங்கு, கன்னடப் படங்கள் கை நிறைய உள்ளன. என்னசெய்வது என்றே தெரியவில்லை என்று அங்கலாய்க்கிறார் மான்யா.

மான்யாவுக்கு கிளாமர் நன்றாக வருகிறதே, அப்படியே தொடர்ந்து நடிப்பீங்களாஎன்று கேட்டால்,கிளாமர் எங்கே இல்லை. எல்லா இடத்திலும் கிளாமர் இருக்கிறது.ஹோட்டல் வரவேற்புப் பெண்ணை பாருங்கள், கிளாமாரகவும், அழகாகவும்இருக்கிறார். விமானப் பணிப் பெண்ணுக்கும் அழகுதான் முக்கியம். சினிமாவிலும்எலலாமே கவர்ச்சிதான்.

குறிப்பாக பெண்கள் என்றாலே அழகைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இதுவே சினிமாஎன்றால் கிளாமரை எதிர்பார்க்கிறார்கள். அது இல்லாமல் ஜெயிப்பது கடினம்.இருந்தாலும் அதையும் மீறி ஒரு சிலர் ஜெயித்துள்ளதையும் மறுக்க முடியாது என்றுசொல்லி முடித்தார் மான்யா.

மான்யாவுக்கு 100 படங்கள் நடிக்க ஆசையாம். அது நிறைவேறிய பினனர்தான்கல்யாணமாம், கச்சேரியாம். நல்ல கொள்கைதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil