15 வருஷமா லவ் பண்றேன்.. விஷாலுக்கும் எனக்கும் திருமணமா?.. மார்க் ஆண்டனி, பணி அபிநயா பளிச் பேட்டி!
சென்னை: நாடோடிகள், மார்க் ஆண்டனி, பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து வரும் நடிகை அபிநயா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய காதல் குறித்தும் விஷாலுடன் திருமணம் செய்யப் போகிறேன் என பரவி வரும் கிசுகிசு குறித்தும் பேசியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான நடிகை அபிநயா 2008ம் ஆண்டு தெலுங்கில் வெளியான நேனிந்தே, கிங் மற்றும் சங்கமம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு சமுத்திரகனி நாடோடிகள் படத்தில் விஜய் வசந்துக்கு ஜோடியாக அவர் நடித்ததை பார்த்து அவருக்கு ஏகப்பட்ட விருதுகளும் வரவேற்புகளும் குவிந்தன.

ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ஆம் அறிவு, வீரம், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23, நிசப்தம், விழித்திரு, சீதா ராமம், மார்க் ஆண்டனி, ஃபேமிலி ஸ்டார், பணி என பல படங்களில் நடித்து ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்து வருகிறார்.
விஷாலுடன் திருமணமா?: பூஜை மற்றும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்த நடிகை அபிநயாவை விஷால் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக எல்லாம் ரூமர்கள் கிளம்பியதாகவும் அதெல்லாம் கொஞ்சம் கூட உண்மையல்ல என தனது பேட்டியில் அபிநயா சைகை மொழி மூலம் கூறியுள்ளார்.

15 வருஷமா காதலிக்கிறேன்: 33 வயதாகும் நடிகை அபிநயா இன்னமும் ஏன் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. நீங்கள் சிங்கிளா? அல்லது யாருடனாவது மிங்கிளாக இருக்கீங்களா உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன? என்கிற கேள்விக்கு வெட்கப்பட்ட அபிநயா தான் 15 வருடங்களாக தன்னுடன் படித்த நண்பரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவருடன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

பிரா கழட்டும் சீன்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் அபிநயாவுக்கு வெற்றிப் படமாக அமைந்த நிலையில், ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக பணி படத்தில் சமீபத்தில் அபிநயா நடித்திருந்தார். தனது மனைவியை கொடூரமாக சீரழித்தவர்களை தேடிப் பிடித்து ஜோஜு ஜார்ஜ் பழிவாங்குவது தான் படத்தின் கதை. அதற்காக அபிநயாவின் பிராவை எல்லாம் கழட்டுவது போல ஜோஜு ஜார்ஜ் ரொம்பவே ஆபாசமான முறையில் பலாத்கார காட்சிகளை இயக்கியிருப்பார். அந்த காட்சியில் அபிநயாவை பார்த்த ரசிகர்கள் இவர் இவ்வளவு போல்டாக நடிப்பாரா என பலரும் பார்த்து ஷாக் ஆகிவிட்டனர். பணி படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க இவருக்கு அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











