மாஸ்டர் படத்துல இவங்களுக்கும் மாஸான ரோல் தான் போல.. ஜிம்மே கதியென கிடக்கும் அந்த பிரபல நடிகை!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சக்ராசனம் போஸ் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.
மாஸ்டர் படத்திற்காக நாயகி மாளவிகா மோகனன் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி செய்து வரும் நிலையில், ஆண்ட்ரியாவும் தொடர்ந்து தீவிர உடற்பயிற்சி செய்யும் பதிவுகளை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

போல்டான நடிகை
தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிகை ஆண்ட்ரியாவை புக் செய்கிறார்கள் என்றால், அந்த கதபாத்திரம் நிச்சயம் போல்டான கதாபாத்திரமாகத் தான் இருக்கும். ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை என பல படங்களில் தனது நடிப்பால் ஆண்ட்ரியா மிரட்டியுள்ளார்.

மார்ஷியல் ஆர்ட்ஸ்
கைதி படத்தில் நாயகியே இல்லாமல் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என இரு நாயகிகளை வைத்து படம் இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்திற்காக மாளவிகா மோகனன் பார்க்கவர் எனும் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன ரோல்?
ஆண்ட்ரியா இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக வருகிறாரா அல்லது போலீஸ் அதிகாரியாக வருகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், இவருக்கும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்மே கதி
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் ஆண்ட்ரியா. இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவர் வெளியிட்ட ஜிம் வீடியோவுக்கு லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன.
சக்ராசனம்
ஜிம் பயிற்சி மட்டுமின்றி தீவிர யோகா பயிற்சியும் ஆண்ட்ரியா செய்து வருகிறார். சக்ராசனம் எனப்படும் உடம்பை வில்லாக வளைக்கும் யோகாவை ஆண்ட்ரியா செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஜோக்
மேலும், அந்த புகைப்படத்துடன் ஒரு ஜோக்கையும் கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். உங்களின் தலை முடி தரை தொட வேண்டுமானால், இதுதான் சிறந்த வழி என ஆண்ட்ரியா பதிவிட்டுள்ளார். இப்போதெல்லாம் பெண்களுக்கு நீளமான கூந்தல் வளர்வது கடினம் என்பதை தனது கேப்ஷனில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹாலிடே டூர்
கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயரை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாளவிகா மோகனன், ஆஃப்ரிக்கா சென்று தனது புத்தாண்டை கொண்டாடிய நிலையில், ஆண்ட்ரியா தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்று புத்தாண்டை கொண்டாடினார். அந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











