மல்லாக்க படுத்துக்கிட்டு.. மாஸ்டர் நடிகை என்னம்மா வொர்க்கவுட் பண்றாரு பார்த்தீங்களா!
சென்னை: இந்த லாக் டவுன் நேரத்தில் யோகா, வொர்க்கவுட் என ஃபிட்னஸை பின்பற்றும் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
Recommended Video
மணிரத்னம் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா.
தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த பாடகி
விளம்பர படங்களில் நடித்து வந்த நடிகை ஆண்ட்ரியா, கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார். சிறந்த பாடகியான ஆண்ட்ரியா, அந்நியன் படத்தில் ஹிட்டான கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடி அசத்தி இருப்பார். பின்னர், கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் "கற்க கற்க" பாடலை பாடினார்.

கண்டுபிடித்த கெளதம்
ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் ஆண்ட்ரியா பாடிய அந்த இரு பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆண்ட்ரியாவை அழைத்தார் கெளதம் மேனன். முன்னதாக அந்த ரோலில் நடிக்க சிம்ரன் மற்றும் சோபனாவிடம் பேசி இருந்த நிலையில், கடைசியாக ஆண்ட்ரியா தேர்வானார்.

செல்வராகவனுடன்
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாயகியாக ஆண்ட்ரியா நடித்து அசத்தினார். அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் தான் செல்வராகவனுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக எழுந்த காதல் சர்ச்சை, செல்வராகவன் - சோனியா அகர்வால் பிரிவுக்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

அரை நிர்வாணமாக
தமிழ் சினிமாவில் போல்டான பெண் கதாபாத்திரம் எழுதப்பட்டால், முதல் தேர்வாக நடிகை ஆண்ட்ரியா தான் இருந்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில், மேலாடையின்றி அரை நிர்வாணமாக இயக்குநர் அமீருடன் ஆண்ட்ரியா நடித்த பாடல் காட்சி சர்ச்சையின் காரணமாக பின்னர் நீக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தில்
அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்த ஆண்ட்ரியாவுக்கு, தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா விஜய்சேதுபதியுடன் ஸ்க்ரீன் ஸ்பேஸை பகிர்ந்துள்ளார் என்ற தகவல்கள் எழுந்தாலும், ஆண்ட்ரியாவின் ரோல் குறித்த சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
View this post on InstagramWhen the going gets tough, the tough get going 🙌🏼 #lockdown #stayfit #staypositive #zen #yoga 🌸
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on
வொர்க்கவுட்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ம் தேதி லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிம்முக்கு போக முடியாத சூழலில் நடிகைகள் வீட்டு மொட்டை மாடி மற்றும் ரூமுக்குள்ளே வித விதமான வொர்க்கவுட்களை செய்து வருகின்றனர். மாஸ்டர் பட நடிகை ஆண்ட்ரியாவும் தனது வித்தியாசமான வொர்க்கவுட் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications