ரோஸு.. ரோஸு.. ரோஸு.. அழகான ரோஸு நீ.. டிரெண்டாகும் ’மாஸ்டர்’ நாயகியின் ரோஸ் மில்க் போட்டோ!

Recommended Video

Thalapathy 64 Malavika Mohanan: மாளவிகா மோகனன் Recent Photoshoot

சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், செளந்தர்யா, ரம்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது.

தளபதி விஜய்யின் 65வது படமான மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிங்க் டிரெஸ் புகைப்படங்கள் ட்விட்டரில் #MalavikaMohanan என்ற ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகிறது.

ரோஸ் பியூட்டி

பிங்க் நிறத்தில் ரெட் டாட்டுகள் போட்ட டிரெஸ்சில் ஒரு சைட் ஒப்பன் விட்டு ஹாட்டாகவும் க்யூட்டாகவும் இருக்கும் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. ரோஸு.. ரோஸு.. ரோஸு.. அழகான ரோஸு நீ என ரசிகர்கள் மாளவிகாவை வர்ணித்து வருகின்றனர்.

மாஸ்டர்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் லீடு லேடி மாளவிகா மோகனன் என்பதால், விஜய் ரசிகர்கள் இந்த போட்டோஷூட் புகைப்படங்களை ட்விட்டரில் வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஸ்டைலிஸ்ட் யார்?

மாளவிகா மோகனன் சமீபத்தில் நடந்த ஒரு ஈவன்ட் நிகழ்ச்சிக்காக இந்த க்யூட் டிரெஸ்சில் கலக்கியுள்ளார். ஸ்டைலிஸ்ட் அர்ச்சா மேத்தா என்பவர் தான் மாளவிகா மோகனின் இந்த பியூட்டிக்கு காரணமாம்.

ஸ்ட்ராபெர்ரி

பிங்க் நிறத்தில் ரெட் டாட் அணிந்த கவர்ச்சியான உடை உடுத்தி போஸ் கொடுத்துள்ள மாளவிகா மோகனனை ஸ்ட்ராபெர்ரி பெண்ணே என்றும் பக்காவாக வர்ணித்து வருகின்றனர்.

மனதை திருடிவிட்டாய்

தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி பல தமிழ் ரசிகர்களையும் இளைஞர்களையும் மாளவிகா மோகனனின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது. யு ஸ்டோல் மை ஹார்ட் என்ற கமெண்ட்டுகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டு ஹாஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.

ஸ்டைலிஷ்

மாளவிகா மோகனனின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்டைலிஷ் அழகி என்றும் மிஸ் ஸ்டைலிஷ் என்றும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

பிங்க்

பிங்க் நிற உடையில் மிகவும் அழகா இருக்கீங்க என இந்த நெட்டிசனும் மாளவிகா மோகனனின் ரம்யமான அழகில் மயங்கி கமெண்ட் செய்துள்ளார்.

ஆல்பன்லீபல்

ஆல்பன்லீபல் சாக்லெட்டின் ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் போல இருக்கீங்க என ரசிகர்கள் ஓவரா புகழ்ந்து வருகின்றனர். பார்த்து சாப்பிட்ற போறாங்க..

ரோஸ் மில்க்

மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் போல்டாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான போல்டு புகைப்படங்களுக்கு நடுவே தற்போது வெளியாகியுள்ள க்யூட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த நெட்டிசன் ரோஸ் மில்க் என கமெண்ட் செய்துள்ளார்.

குயின்

மேலும், மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்களையும் இந்த மாளவிகா மோகனன் ஹாஷ்டேக்கில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X