பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய்? மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியானார்.
ஆனால் அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் முதல் இரண்டு படங்களிலேயே மாஸ் நடிகர்களின் படங்களில் நடித்ததால் ஏராளமான ஃபேன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.

காமன் டிபி
இந்நிலையில் மாளவிகா மோகனன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்,. இதனை முன்னிட்டு மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று முன் தினமே மாளவிகா மோகனனின் காமன் டிபியை ரிலீஸ் செய்தனர். மாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் மாஸ்டர் பட பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

ட்ராவலிங் பிடிக்கும்
இதனை தொடர்ந்து மாளவிகா மோகனன் நேற்று மாலை ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது #AskMalavika என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேள்வி கேட்டனர். உங்களை எந்த விஷயம் மகிழ்ச்சிப்படுத்தும் என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா, பயணம் செய்வது பிடிக்கும் என்றார்.மேலும் புதிய மக்கள், புதிய இடம், புதிய கலாச்சாரத்தை பார்ப்பதும் பிடிக்கும் என்றார். மார்ச் மாதம் ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் லாக்டவுன் காரணமாக போக முடியவில்லை என்றார்.

வாழ்த்து சொன்னாரா?
மற்றொரு ரசிகர் உங்களின் பிறந்த நாளுக்கு தளபதி வாழ்த்து சொன்னாரா என கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், எஸ் என பதிலளித்தார். மேலும் அவர் எப்போதுமே ரொம்ப இனிமையானவர் என்றும் புகழாரம் சூட்டினார் மாளவிகா மோகனன்.
Recommended Video

மலையாளி ஸ்டைல் மீன்கறி
மற்றொரு ரசிகர் உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், மலையாளி ஸ்டைஸ் மீன் கறி மற்றும் மீன் வறுவல் மற்றும் சாதம் என்றார். குறிப்பாக அம்மா சமையல் ரொம்ப பிடிக்கும் என்றும் நடிகை மாளவிகா மோகனன் கூறினார்.

நடிக்க ஆசை
மேலும் ஏதாவது தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், இதுவரை இல்லை, ஆனால் நான் தெலுங்கு படங்களுக்கு பெரிய ரசிகை, விரைவில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறினார்.

போட்டோ எடுக்க ஆசை
ஏஆர் ரஹ்மான் குறித்து சில வார்த்தைகள் என கேட்ட ரசிகருக்கு பதில் அளித்த மாளவிகா, தான் அவருடைய பெரிய ரசிகை என்றார். ஒவ்வொரு முறையும் தான் சென்னைக்கு வரும்போது தனது நண்பர்கள் மற்றும் சகாக்களிடம் ஏஆர் ரஹ்மான் சாருடன் தான் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறுவேன். துரதிர்ஷ்டவசமாக அது இன்னும் நடக்கவில்லை! என்றார்.

வெற்றிமாறன்..
மேலும் எந்த கோலிவுட் டைரக்டருடன் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், பட்டென வெற்றிமாறன் சார் என்றார். மேலும் அவருடைய வேலைக்கு தான் ஒரு பெரிய ரசிகை என்றும் கூறினார் மாளவிகா மோகனன்.


Click it and Unblock the Notifications











