Silk உடம்பை பார்த்து.. சுமியை நான் ரொம்ப மிஸ் பன்றேன்.. மனம் திறந்து பேசிய பிரபலம்
சென்னை: குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபா தாரேன் பாடல் தமிழகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது. நாட்டுப்புற பாட்டு படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு மாஸ்டர் ஜான் பாபு நடனம் அமைத்திருந்தார். இப்பாடலுக்கு நடனம் அமைத்திருந்த விதம் குறித்தும் குட் பேட் அக்லி பட நடன மாஸ்டர் அசார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவை பார்த்து வியந்த கனவு கன்னியை பற்றி ஜான் மாஸ்டர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். அவர் குண்டாக இருப்பதை பார்த்து படக்குழுவினருக்கு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைக்கலாம் என நடிகர் வினுசக்ரவர்த்தியிடம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் நம்பிக்கை தளராத அவர், சில்க்கை கூட்டி சென்று 15 நாட்கள் படத்தில் நடிப்பதற்கான பயிற்சியளித்துள்ளார். அதன் பிறகு அவர் நடிப்பை கண்டு மொத்த படக்குழுவும் வியந்து பாராட்டியிருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த பெண் சினிமாவே என்னவென்று தெரியாமல் அந்த துறையிலும் கால்தடம் பதித்து தனக்கென்று ஒரு முத்திரையை பதித்து சென்றிருக்கிறார் சில்க்.

அவரது நடிப்பையும் கவர்ச்சியை பற்றி பேசுபவர்கள் அவரது மரணத்தை பற்றி பேச தயங்குவார்கள். காரணம் அவர் வாழ்க்கை முழுக்க சர்ச்சைகளோடு வாழ்ந்திருக்கிறார். திரையிலும், நிஜ வாழ்விலும் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை. எதற்கும் துணிந்த பெண்ணாக இருந்ததனால் என்னவோ தூக்கு கயிறு கூட எளிமையான மரணம் என நினைத்துவிட்டார். இன்றைக்கும் பல நடிகைகள், துணை நடிகைகளின் மரணங்கள் கடந்து போகும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சில்க் ஸ்மிதா என்று சொல்லும்போது ஒரு ரசிகரின் கண்கள் அகழ விரிவதை பார்க்கலாம். அவங்க மட்டும் உயிருடன் இருந்திருந்தால் என பேசி சிலாகிப்பார்கள்.
திருமண வாழ்க்கை: அவரது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் மட்டும் இல்லாமல் சில மர்மங்களும் நீடிக்கின்றன. ஆனால், விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா திரையுலகில் ஒரு முகமாக காணப்பட்டாலும், நிஜ வாழ்வில் திருமணம், குழந்தை வீடு குடும்பம் என வாழ ஆசைப்பட்டவர். ஆனால், அவரது ஆசை நிறைவேறாத கனவாக மாறிவிட்டன. படப்பிடிப்பு தளத்திற்கு டெக்னீசியன்கள் பலர் குழந்தைகளுடன் வந்தால் சில்க் அள்ளிக் கொஞ்சுவாராம். மழலையாக மாறிவிடுவதாக பலரும் தெரிவித்திருக்கின்றனர். அவரிடம் பிரபல நாளிதழ் ரிப்போர்ட்டர் பேட்டி எடுத்த போது நீங்கள் நடிகையாக இல்லாவில்லால் என்னவாக ஆசைப்பட்டிருப்பீர்கள் என கேட்டதற்கு, சற்றும் தயங்காமல் மாவோயிஸ்டாக இருந்திருப்பேன். நாங்கள் வளர்ந்த பகுதியில் அதிகம் மக்கள் மாவோயிஸ்டாக இருந்தனர். பலரும் எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை கேட்டு வியந்து போன பத்திரிகையாளர் சில்க் ஸ்மிதா மீதான பார்வை மாறியிருக்கிறது.

ஒத்த ரூபா தாரேன்: குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்றுள்ள ஒத்த ரூபா தாரேன் பாடல் அஜித் ரசிகர்களை தாண்டி டிரெண்டாகி வருகிறது. பழைய பாடல்களை படங்களில் வை்த்து வைஃப் செய்து வருவது தற்போது மாடலாக வருகிறது. அந்த வகையில் இந்த பாடலுக்கு நடனம் அமைத்த மாஸ்டர் ஜான் பாபு சில்க் ஸ்மிதா பற்றிய தெரியாத பல பக்கங்களை தெரிவித்துள்ளார். மேலும் அவரை பற்றி பேசும்போது கண் கலங்கினார். ஜான் பாபு மாஸ்டர் கூறியதாவது, சில்க் நடனம் ஆடிய பல பாடல்களுக்கு நான் நடனம் அமைத்திருக்கிறேன். மற்றவர்களிடம் எப்படி என்று தெரியாது நான் சில்க்கை சுமி என்றே அழைப்பேன். அவரும் டார்லிங் என்று தான் அழைப்பார். அதோட நிறுத்திக்குவோம். ஆனால், சில்க் ஸ்மிதா பேசும்போதே குழந்தை பேசுற மாதிரி இருக்கும். அவங்க மேக்கப் போட்டு நடிக்க வந்துட்டா அது வேற மாதிரியா இருப்பாங்க என தெரிவித்தார்.
மேக்கப் இல்லாத சில்க்: பாட்டுக்கு இந்த உடை சொல்லிட்டா போதும் அதற்கான காஸ்டீயுமை சில்க் ரெடி பண்ணிடுவாங்க. அதற்கு இயக்குநரும் ஓகே சொல்லிடுவார். எனக்கு தெரிந்து சில்க் போடுற காஸ்டியூமை மாத்தனும் சொல்லி கேட்டதில்லை. அவங்க போடுறதுதான் ஆடை. அந்த விசயத்தில் சில்க் கில்லி தான் என ஜான் பாபு மாஸ்டர் தெரிவித்தார். சுமியை பொறுத்தவரை நடனத்தை தாண்டி ரசிகர்களுக்காகவே அவர் ஆடையை குறைத்து கொள்வார். அவர் கண்கள், இடை, சில்க் உடையை ரசிக்கனும் என்பது காலப்போக்கில் புரிந்துகொண்டேன் என ஜான் பாபு தெரிவித்தார்.

எதற்கும் கவலைப்படமாட்டாங்க: சினிமாவில் இருப்பவர்களை பற்றி நன்கு தெரிந்தவர் சில்க். அதனால், தான் அவரால் அந்த உயரத்திற்கு போக முடிந்தது. தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்கமாட்டார். அவர்களை பற்றி தெரியும் என்பதால் எதை பற்றியும் கவலைப்படாமல் தனக்கு பிடித்த சில்க்காக படப்பிடிப்பில் இருந்தார் என ஜான் பாபு தெரிவித்தார். சில்க் நெருப்பு மாதிரி அவங்க கிட்ட பேசுறதுக்கே தயங்குவாங்க. எனக்கு அந்த கவலை இல்லை. காரணம் சில்க் என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும் என ஜான் பாபு தெரிவித்தார்.
கெட்டவார்த்தையில் திட்டு வாங்கிய சில்க்: கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தில் சில்க் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடியிருந்தார். வெத்தலை போட்ட சோக்குல பாடலுக்கு நடனம் அமைத்த போது சில்க்கின் உடம்பை பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். துப்பாட்டா இல்லாமல் இயக்குநர் ஆட சொல்லியிருந்தார். நான் சொன்னதை கேட்டு சில்க் ஆடினார். அப்போது ஒரு பக்கம் உடை கொஞ்சம் கிழிந்தபடி ஸ்பாட்டுலேயே விபரீதம் நடந்தது. ஆனால், அதை கண்டுகொள்ளாமல் சில்க் நடனம் ஆடியதாக ஜான் பாபு தெரிவித்திருக்கிறார்.

சில்க் எனக்கு பிடித்த சுமி: பிறகு சில்க்கை பத்தி பேசிய அவர், என்ன சுமி அழகா இருக்க, யார் பேசினால் என்ன கண்டுக்காத என கூறி கமெண்ட் அடிப்பேன். சில்க் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். காரணம் தெரியாமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் நிறைய படங்களி் வேலை பார்த்த போது சில்க்கை பற்றி சரியாக புரிந்துகொள்ளாமல் போயிட்டேன். ஒரு வேளை அவளிடம் நன்றாக பேசி பழகியிருந்தால் மாற்றம் செய்திருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறது. நான் கஷ்டப்பட்டு இந்த சினிமாவிற்குள் வந்து ஒரு குடும்பத்தை உருவாக்கியிருக்கிறேன். இதனால், படம், பணம் இப்படியான சூழலில் ஓட வேண்டிய கட்டாயத்தால் சில்க் மரணம் என்னை மிகவும் பாதித்ததாக ஜான் பாபு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











