இயக்கத்தில் அவர்.. இசையில் இவர்.. மாஸ்டர் நாயகியின் மனசுக்கு பிடிச்ச பிரபலங்கள் இவங்கதானாம்!

சென்னை: பிடித்த இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்ஸ்டா பக்கத்தில் நடிகை மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார்.

Recommended Video

Anirudh Massive update on Master Release | Lokesh Kanagaraj, Thalapathy Vijay, Diya Menon

தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனின் இன்ஸ்டா மற்றும் டிவிட்டர் பக்கத்தில் பல தளபதி ரசிகர்கள் ஏதாவது அப்டேட் கிடைக்குமா என்று காத்துக் கிடக்கின்றனர்.

மேலும், விஜய் ரசிகர்களின் ரீசென்ட் தலைவியாகவும் மாளவிகா மோகனன் மாறியிருக்கிறார்.

ஆர்வம் அதிகம்

ஆர்வம் அதிகம்

மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனனுக்கு மாடலிங் துறையில் அதிகளவு ஈடுபாடு இருக்கிறது. செம செக்ஸியான உடைகளை அணிந்து கொண்டு அவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புத்தகங்களை வாசிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

போட்டோகிராஃபி

போட்டோகிராஃபி

அதே போல போட்டோகிராஃபியிலும் கலக்கி வருகிறார். கவர்ச்சியை மட்டும் நம்பாமல் இதுபோன்ற பல்வேறு திறமைகளை கொண்டிருப்பதால் தான் ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி படத்திலேயே நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஆப்ரிக்காவுக்கு சுற்றுலா சென்ற மாளவிகா அங்கே வன விலங்குகளை போட்டோ எடுத்து பதிவிட்டு பாராட்டுக்களை அள்ளியிருந்தார்.

பிடித்த இயக்குநர்

பிடித்த இயக்குநர்

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர் ஒருவர், உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார் என்ற கேள்வியை முன் வைக்க, சட்டென மாதவன், ஷாலினி நடிப்பில் வெளியான அலைபாயுதே படத்தின் போட்டோவை போட்டு மணிரத்னம் தான் என பதில் அளித்துள்ளார்.

பிடித்த இசையமைப்பாளர்

பிடித்த இசையமைப்பாளர்

மற்றொரு ரசிகர், தமிழ் சினிமாவில் உங்கள் மனதை கவர்ந்த இசையமைப்பாளர் யார் என்ற கேள்வியை கேட்க, பேட்ட, மாஸ்டர் படங்களுக்கு இசையமைத்துள்ள ராக்ஸ்டார் அனிருத் தான் என அவருடன் கிராமத்தில் பக்தி மணம் கமழ எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு பதிலளித்துள்ளார் மாளவிகா மோகனன்.

ரசிகர்கள் ஏக்கம்

ரசிகர்கள் ஏக்கம்

மாஸ்டர் படத்தில் டீச்சராக மாளவிகா மோகனன் எப்படி நடித்துள்ளார் என்பதை காணவும், "அந்த கண்ண பார்த்தாக்க" வீடியோ பாடலை கண்டு ரசிக்கவும் தளபதி ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். வரும் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நிச்சயம் வெயிட்டான பிறந்தநாள் ட்ரீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X