கோட் சூட்டில் கிக்காக போஸ் கொடுக்கும் மாஸ்டர் ஹீரோயின்!
சென்னை : மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்திய நடிகை மாளவிகா மோகன் இப்பொழுது தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாகியுள்ளார்.
ஒரு சில திரைப்படங்களிலேயே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறிய உள்ள மாளவிகா மோகனன் கவர்ச்சியிலும் தாறுமாறு செய்து வருகிறார்.
தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா இப்பொழுது கோட் சூட்டில் சூட்டைக் கிளப்பும் கிளாமரில் கிக்காக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

தமிழில் சரளமாக பேசக்கூடிய நடிகை
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மோகனன் தமிழில் சரளமாக பேசக்கூடிய நடிகைகளில் ஒருவராக உள்ளார் . தமிழ் சினிமாவிற்கு மிகத் தாமதமாகவே அறிமுகமாகி இருந்தாலும் நடித்த சில படங்களிலேயே இப்பொழுது பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக
பேட்ட திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் மாளவிகா மோகன் இந்த படத்தில் ரசிகர்களால் அந்த அளவிற்கு கவனிக்கப்படவில்லை. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். பெரும் நட்சத்திர பட்டாளங்கள் உடன் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் நடித்ததற்கு பிறகு இப்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.

பொங்கலுக்கு ரிலீசாகும்
மாஸ்டர் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி பட வாய்ப்புகளையும் குவித்து வரும் மாளவிகா மோகனன் இப்பொழுது தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் இப்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆக்சன் த்ரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட் சூட்டில் செம கிக்காக போஸ்
சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க எதிர்நோக்கி காத்திருக்கும் மாளவிகா மோகனன் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார் அந்த வகையில் இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது கோட் சூட்டில் செம கிக்காக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











