படம் முடிஞ்சு வெளியே வரும்போது நிச்சயமா ஒரு கனத்தோடதான் வருவீங்க.. உருகும் மாயநதி ஹீரோயின்!

Recommended Video

Maayanadhi Tamil Movie | Abi Saravanan | Venba | Adukalam Naren

சென்னை: மாயநதி படம் குறித்து அப்படத்தின் ஹீரோயின் வெண்பா உருகி பேசியிருக்கிறார்.

மாயநதி படம் நேற்று தமிழகம் முழுக்க வெளியாகியிருக்கிறது. மயிலாடுதுறையை சேர்ந்த மருத்துவரான அசோக் தியாகராஜன் சினிமா மீது கொண்ட காதலால் இப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார்.

Mayanadhi Heroin talks about the film

இதில் அபி சரவணன் மற்றும் வெண்பா ஆகியோர் நடித்துள்ளனர். மாயநதி படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரினி இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அபி சரவணனின் நண்பராக அப்புக்குட்டி, வெண்பாவின் தந்தையாக நரேன் ஆகியோர் தங்களின் நடிப்பை அட்டகாசமாய் வெளிப்படுத்தியிருக்கின்றனர். படம் நேற்று வெளியான நிலையில் பாஸிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

Mayanadhi Heroin talks about the film

படிப்பில் சிறந்து விளங்கும் பெண்ணின் வாழ்க்கையில் காதல் நுழைந்தால் அவர்களின் எதிர்காலம் எப்படி செல்லும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அட்டகாசமாக படத்தை கொடுத்திருக்கிறார் அசோக் தியாகராஜன்.

Mayanadhi Heroin talks about the film

இந்நிலையில் படம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள படத்தின் நாயகி வெண்பா, படம் குறித்து உருகியிருக்கிறார். அப்பா - மகள் உறவு குறித்த படம் என்று கூறியுள்ள வெண்பா படம் முடிந்து வெளியே வரும்போது நிச்சயம் ஒரு கனத்துடன்தான் வருவீர்கள் என்று கூறியிருக்கிறார்.

அதோடு திரையரங்குக்கு சென்று படத்தை பாருங்கள் என்றும் வெண்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். படம் குறித்து பாஸிட்டிவான விமர்சனங்கள் வருவதால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.

More from Filmibeat

Read more about: mayanadhi மாயநதி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X