twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் சுசி கணேசன் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்: அமலா பால் #MeToo

    By Siva
    |

    Recommended Video

    சுசி கணேசன் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்: அமலா பால்- வீடியோ

    சென்னை: இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள லீனா மணிமேகலை சொல்வது எல்லாம் உண்மை என்கிறார் நடிகை அமலா பால்.

    இயக்குனர் சுசி கணேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த சுசி கணேசன் ரூ. 1 நஷ்டஈடு கேட்டு லீனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில் நடிகை அமலா பால் லீனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    [நிஜ வாழ்க்கையில் த்ரிஷாவின் 'ராம்' யார்?]

    கணேசன்

    கணேசன்

    நான் லீனா மணிமேகலையின் இயக்குனர் சுசி கணேசனின் மீதான குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குனராக அந்த பெண் என்ன பாடுபட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது. நான் அவர் இயக்கிய திருட்டுப் பயலே 2 படத்தின் கதாநாயகியாக இருந்தாலும் இயக்குனர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடல் ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடு பட்டிருப்பார் என்பதை நான் அறிகிறேன்.

    மீ டூ

    மீ டூ

    அந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இன்றைய பொருளாதார நிலையும், பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஒரு எளிய இரையாக்கி விடுகிறது. அங்கிங்கு எனாது படி அனைத்து தொழில்களிலும், துறைகளிலும் இந்த கொடுமை நடந்து வருகிறது.

    மகள்

    மகள்

    தங்களது மனைவியையும், மகள்களையும் போற்றி காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையை செலுத்துவது துரதிர்ஷ்டவசமானது. இதுவே இந்தியர்களாகிய நாம் நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மீக துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.

    கலை துறை

    ஆன்மீக துறையிலும், கலை துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளி வரத் துவங்கி உள்ளது. இதே போல மற்ற துறைகளிலும் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மற்ற துறைகளில் இருந்தும் #metoo குறித்த பதிவுகள் வெளி வர வேண்டும். அரசாங்கமும், நீதி துறையும் எதிர்காலத்தில் இவ்வித கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும் என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Amala Paul has supported film maker Leena Manimekalai who accused director Susi Ganeshan of sexual harassment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X