பழிவாங்க மீ டூ உதவியது: நடிகை தனுஸ்ரீ தத்தா
மும்பை: பழிவாங்க மீ டூ இயக்கத்தை பயன்படுத்திக் கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படகேர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார். இதையடுத்து பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தது.
அவரை பார்த்துவிட்டு பல நடிகைகள், பிற துறைகளை சேர்ந்த பெண்களும் பாலியல் புகார் தெரிவித்தனர்.

பாலியல் புகார்
2008ம் ஆண்டு நடந்த சம்பவம் பற்றி தனுஸ்ரீ புகார் தெரிவித்தார். அவரை போன்றே பிற பெண்களும் 10, 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பற்றி புகார் கூறினார்கள். பாலியல் தொல்லைக்கு ஆளானால் இத்தனை ஆண்டுகளாக ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விமர்சிக்கப்பட்டனர்.

தனுஸ்ரீ
இந்தியாவில் மீ டூ இயக்கத்தை துவங்கி வைத்தவர் என்று பெயர் எடுத்துள்ளார் தனுஸ்ரீ. இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் ஒன்றும் இந்த இயக்கத்தை துவங்கவில்லை. மீ டூ இயக்கம் எவர் ஒருவரையும் சார்ந்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வளர்ச்சி பெறாது என்று தெரிவித்துள்ளார் அவர்.

பழிவாங்குதல்
நான் எனக்கு நடந்ததை கூறினேன் அவ்வளவு தான். அதற்காக என்னை பெரிய ஆளாக்க வேண்டாம். நான் மாற்றத்திற்கான ஒரு கருவி அவ்வளவு தான். மேலும் என் கெரியரை பாதித்த அந்த சம்பவத்திற்கு பழிவாங்க விரும்பினேன் என்று தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.

நடக்காதது
நடந்தது, நடக்காதது, நடந்திருக்க வேண்டியதை எல்லாம் பெண்கள் பாலியல் புகாராக தெரிவிப்பதாக சீனியர் நடிகையான சவுகார் ஜானகி தெரிவித்தார். மேலும் மீ டூ புகார் கூறுபவர்கள் விளம்பரம் தேட அல்லது அடுத்தவர்களின் கெரியரை கெடுக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பழிவாங்க மீ டூ இயக்கம் உதவியதாக தனுஸ்ரீ கூறியுள்ளார். மீ டூ என்று கூறும் பெண்களை அசிங்கப்படுத்தி வருபவர்களுக்கு தனுஸ்ரீயின் வார்த்தைகள் தெம்பு அளிப்பது போன்று அமைந்துவிடக் கூடாது.


Click it and Unblock the Notifications











