"மீ டூ", ஆனால் அது என் தப்பு தான்: நிவேதா பெத்துராஜ்
சென்னை: தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
கணேஷ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்துள்ள படம் திமிரு புடிச்சவன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.
திமிரு புடிச்சவன் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது நிவேதா பெத்துராஜ் கூறியதாவது,

விஜய் ஆண்டனி
கணேஷ் சார் கதை சொல்லும்போது பயமுறுத்திவிட்டார். 40 நாட்கள் படப்பிடிப்பு, புல்லட் ஓட்ட வேண்டும் என்றார். ஹீரோவை பின்னால் வைத்து புல்லட் ஓட்ட வேண்டும் என்றார். ஒரு வாரம், 10 நாட்களில் கற்றுக் கொண்டேன். படப்பிடிப்புக்கு வந்தபோது முதலில் என்னை வைத்து புல்லட் ஓட்டு என்றார் இயக்குனர். அவரை வைத்து ஓட்டியதும் நன்றாக ஓட்டுகிறாய் என்றார். அதை பார்த்த பிறகு விஜய் ஆண்டனி சார் என்னுடன் புல்லட்டில் பயணித்தார். அந்த காட்சியை படமாக்க 4, 5 மணிநேரம் புல்லட்டில் சுற்றினோம்.

கஷ்டம்
நான் தான் டப்பிங் பேசினேன். இந்த படம் ரொம்ப திமிரு புடிச்ச படம், சீரியஸான படம். படப்பிடிப்பு துவங்கியபோது முதல் இரண்டு நாட்கள் மட்டும் கஷ்டமாக இருந்தது. பாடி லேங்குவேஜ், சென்னை பாஷை பேச வேண்டும் என்பதால் கஷ்டமாக இருந்தது. டப்பிங் பேசியபோது என் காட்சிகளை பார்த்து எனக்கே சிரிப்பு வந்தது.

சிறப்பு
மீன்பாடி வண்டியை ஓட்டச் சொன்னார் கணேஷ். இந்த படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். இதுவரை நான் நடித்த படங்களில் இது சிறப்பாக அமைந்துள்ளது. நான் வாய்ப்பு தேடி செல்வது இல்லை. என்னை தேடி வரும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். இணையதளங்களில் என் கவர்ச்சிப் புகைப்படங்கள் வலம் வருகின்றன. அது நான் மாடலாக இருந்தபோது எடுக்கப்பட்டவை.

பார்ட்டி
நானும் மீ டூ பிரச்சனையில் சிக்கியுள்ளேன். ஒரு பார்ட்டிக்கு சென்ற இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். என்ன தான் துபாயில் வளர்ந்தாலும் நான் மதுரைக்கார பெண். அதனால் பயம், வெட்கம் காரணமாக அந்த பார்ட்டியில் நடந்ததை வெளியே சொல்லவில்லை. என் மீது தான் தவறு உள்ளது. நான் அந்த பார்ட்டிக்கு சென்றிருக்கக் கூடாது. செல்லாமல் இருந்திருந்தால் அந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்கிறார் நிவேதா.


Click it and Unblock the Notifications











