சிறுநீரில் தண்ணீர்.. தடயத்தை அழிக்க நடிகை செய்த அசிங்கமான வேலை..மருத்துவ குழுவினர் அதிர்ச்சி!
சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ராகினி திவேதி, தடயத்தை அழிக்க சிறுநீரில் தண்ணீர் கலந்தது மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, போதைப்பொருள் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சுஷாந்த் சிங் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி கைதாகி பின் ஜாமீனில் வெளியே வந்தார்.
போதை பொருள் கடத்தல் வழக்கு: அதன் பின்னர், கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோரும் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில், ராகினி திவேதி போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை பரிசோதனை செய்வதற்காக அவரின் சிறுநீரை பரிசோதனைக்காக எடுத்துவர சொன்ன போது, போதை பொருளை பயன்படுத்தியது தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக சிறுநீரில் குடிநீரைக் கலந்து தடயத்தை அழிக்க முயன்றுள்ளார் ராகினி திவேதி.
சிறுநீரில் தண்ணீர்: சிறுநீரில் தண்ணீரை கலப்பதன் மூலம் சிறுநீரின் தன்மை மாறிவிடும், போதை பொருள் பயன்படுத்தியது மருத்துவக்குழுவிற்கு தெரியாது என நடிகை தப்புக்கணக்கு போட்டுள்ளார். ஆனால், மருத்துவர்களோ, சிறுநீரில் குடிநீர் கலந்து கொடுத்து இருக்கிறார் என்பதை ஆதாரத்தோடு நிரூபித்துள்ள மருத்துவ ஆய்வு குழு இதுதொடர்பாக விசாரித்து வருகிறது.
ஜெயம் ரவி படத்தில்: கன்னட நடிகையான ராகினி திவேதி வீர மதகரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கெம்பே கவுடா, ஷங்கர் ஐபிஎஸ், பங்காரி, ஷிவா, ஹோலி, நாயகா என அடுத்தடுத்த கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் சந்தானத்தின் நடிப்பில் வெளியான கிக் படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிகை ராகினி திவேதி நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











