»   »  ரொம்பமே சமாளிக்கும் மீனா!

ரொம்பமே சமாளிக்கும் மீனா!

Subscribe to Oneindia Tamil

மீன் கண்ணழகி மீனாவின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் காத்திருந்த காலம் அது.இப்போதோ அவரே போன் போட்டுக் கேட்டாலும், எஸ்கேப் ஆகி எல்லோரும் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.ஆனாலும் தான் ரொம்ப பிசி என்பது போல காட்டிக் கொள்வதில் மீனா ரொம்பவே தேறி விட்டார்.

சுட்டிப் பொண்ணு மீனா ரொம்ப நாளைக்கு முன்பாகவே வயது வந்தோர் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு விட்டார்.பெரிய தலைகளுடனேயே தொடர்ந்து நடித்து வந்ததால், சின்ன வயசு ஹீரோக்களை அவர்கண்டுகொள்ளாமலேயே விட்டு விட்டார்.

அதன் பலனை இப்போதுதான் அனுபவிக்கிறார். பெருசுகளுடன் சேர்ந்த நடிகையாச்சே என்று எல்லா இளசுகளும்அத்து விட்டு விட, பட வாய்ப்புகள் திடீரென குறைந்து போய் தமிழ் சினிமாவில் பீல்டு அவுட் ஆனார் மீனா.

ஆனாலும், விஜய்யுடன் குத்துப் பாட்டு, அஜீத்துடன் ஜோடி என அவ்வப்போது தலையைக் காட்டத்தான்செய்தார். அப்படியும் மார்க்கெட் தேறாததால் தமிழை விட்டு விட்டார். தாய்மொழியான மலையாளத்தில் சிலபடங்களில் நடித்தார். இப்போது டிவி பக்கம் தாவி விட்டார்.

மீனாவின் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி தொடருக்கு பெரிய அளவில் வரவேற்புஇல்லையாம். இதனால் அந்த தொடரை ராத்திரி 10 மணிக்கு மாற்றி விட்டனர்.

என்னம்மா இப்படி ஆகிப் போச்சே என்று யாராவது கேட்டால் மட்டும் மீனா படு தெளிவாக பதிலைவைத்திருக்கிறார். எனக்கு வாய்ப்பே இல்லைன்னு யார் சொன்னது, தமிழ், தெலுங்கு, மலையாளம்னு வாய்ப்புகள்வந்து கொண்டுதான் உள்ளன.

ஆனா எனக்குப் பிடிச்ச மாதிரி எதுவுமே இல்லையே! ஏற்கனவே பண்ணின கேரக்டர்கள்தான் திரும்பத் திரும்பவருது. அது சரியா வராது. அதனால்தான் படங்களை எல்லாம் ஒத்துக்காமல் செலக்ட்டிவ்வாக இருக்கிறேன்.இப்போது கூட வினயன் இயக்கத்துல பிளாக் கேட் என்கிற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன் என்றுசமாளிக்கிறார் மீனா.

மீனாவுக்கு எப்போதான் கல்யாணம்? இதைக் கேட்டால், மெளனமாக புன்னகைக்கிறார் மீனா. ஆனால் அவருக்குநெருங்கிய வட்டாரமோ, மீனாவுக்கு நல்ல நல்ல மாப்பிள்ளைகள் வந்தவண்ணம் உள்ளனராம். ஆனால் அவரதுஅம்மாதான் ஜாதகம் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்று தட்டிக் கழித்து வருகிறாராம்.மீனாவுக்கும் இதில் கொஞ்சம் போல வருத்தம்தானாம்.

அப்ப கன்னட சுதீஷுடன் காதல் என்ற பேச்சு மெய்யில்லையா?

Read more about: meenas tv serial a flop

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil