»   »  டிஸ்கோ கணவருக்கு மீனா ஸாரி!

டிஸ்கோ கணவருக்கு மீனா ஸாரி!

Subscribe to Oneindia Tamil

முன்னாள் குலுக்கல் நாயகி டிஸ்கோ சாந்தியின் கணவரான தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியுடன் ஜோடி போட மீனாமறுத்து விட்டாராம்.

இடையில் சுணங்கிப் போயிருந்த மீன் கண் அழகி மீனாவுக்கு இப்போது மீண்டும் ஓரிரு படங்கள் வரஆரம்பித்துள்ளன. இதனால் மறுபடியும் ஷூட்டிங், கேரவன், அவுட்டிங் என சுறு சுறுப்பாக இருக்கிறார் மீனா.

மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்திலும் ஒரு படம் கையில் உள்ளது. இந் நிலையில் ஒருதெலுங்குப் பட வாய்ப்பும் வந்தது. ஆனால் அந்தப் படத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம் மீனா.

ஏனாம்? படத்தின் நாயகன் ஸ்ரீஹரி என்பதால்தானாம். இந்த ஸ்ரீஹரி வேறு யாருமல்ல, டிஸ்கோ சாந்தியின்வீட்டுக்காரர். தெலுங்கில் ஆரம்பத்தில் வில்லனாக தூள் கிளப்பிக் கொண்டிருந்த ஹரி தானே பணத்தைப் போட்டுஇப்போது ஹீரோவாகிவிட்டார்.

இவரை வைத்து குட்டி பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கிறார்கள். அந்தப் படங்களும் 3 வாரம் வரை ஓடி முதலுக்குநஷ்டமில்லாமல் வசூலைக் கொடுப்பதால் ஹரி காட்டிலும் லேசாக மழை பெய்து வருகிறதாம்.

ஹரியுடன் ஜோடி போட்டு நடிக்க வந்த வாய்ப்பைத்தான் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். என்னஇருந்தாலும் நான் சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்ட நாயகி. வில்லனாக நடித்து 2வது ஹீரோவாகமாறி, இப்போது சின்ன பட்ஜெட் படங்களில் நடிப்பவருடன் ஜோடி சேர்ந்தால் இமேஜ் என்னாவது என்றுஉதட்டைப் பிதுக்குகிறாராம் மீனா.

மீனாவைப் பத்திய ஒரு சைடு நியூஸ். மீனா, சரியான அம்மா செல்லம். அம்மா மல்லிகா இல்லாமல் ஒருகாரியமும் நடக்காதாம். அதற்கேற்ப மல்லிகாவும், மீனாவின் நிழல் போல கூடவே இருக்கிறார்.

மீனா கார் டிரைவரை வைத்துக் கொள்ளவில்லை. டிரைவரை வைத்தால் பல்வேறு சிக்கல்கள் வரும்,சமாச்சாரங்கள் வெளியே போகும். இன்னாத்துக்கு வம்பு என்றுதான் டிரைவரை வைக்கவில்லையாம்மல்லிகாம்மா.

அதற்குப் பதில் மீனா வெளியே செல்வதாக இருந்தால் மல்லிகா தான் கார் ஓட்டிச் செல்கிறார். மீனா எங்கேபோனாலும் அவருக்கு காரோட்டி மல்லிகாம்மா தான்.

சும்மா சொல்லக் கூடாது, மல்லிகாம்மா காரை ஓட்டும் அழகே தனிதான். குலுங்காமல், அலுங்காமல் கொண்டுபோய் சேர்ப்பாராம்.

அப்புறம், மீனா அம்மான்னா சும்மாவா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil