அபிதா போய் மீனா வந்தார்...
திமுக தலைவர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதும் கண்ணம்மா படத்தில் அபிதாவுக்குப் பதிலாக மீனா நடிக்கிறார்.
இந்தப் படத்தில் டிவி நடிகர்கள் பலரும் அறிமுகமாகும் நிலையில் ஹீரோயினாக அபிதா புக் செய்யப்பட்டார். ஆனால், உள்ளக் கடத்தல் என்ற படத்தில் நடிக்க காசு வாங்கிவிட்டு சூட்டிங்கில் இருந்து பாதியில் புறப்பட்டுப் போய் டேக்கா கொடுத்தார் அபிதா.
இதனால், அவருக்கு ரெட் கார்ட் போட்டுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். இது தெரியாமல் அவரை புக் செய்துவிட்டது கண்ணம்மா பட யூனிட்.
இதை அறிந்த கருணாநிதி, அபிதாவை நீக்கச் சொல்லிவிட்டாராம். அவருக்குப் பதிலாக மீனாவைப் பேசி ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.
படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. தாம்பரம் அருகே வர்ஷா ஹவுஸ் என்ற பங்களாவில் நடந்த சூட்டிங்கில் மீனா கலந்து கொண்டார்.
பாபா விக்ரம் இயக்கும் இந்தப் படத்தின் முதல் காட்சியில் பேசப்பட்ட வசனம் சக்ஸஸ். கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி படத்தில் சிவாஜி பேசிய முதல் வசனமும் அது தான்.
தமிழ்ப் புத்தாண்டில் படம் ரிலீசாம்.
தமிழில் சான்ஸ் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் மீனாவை அவ்வப்போது அபூர்வமாகவே சென்னையில் பார்க்க முடிகிறது. இப்போது கன்னடத் திரையுலகில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இதுவரை மொத்தம் 180 படங்களில் நடித்துமுடித்துவிட்டாராம்.
அவரை டிவிக்கு இழுக்க கடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் மீனாவுக்கு இஷ்டம் தான் என்றாலும் தாயார் ராஜமல்லிகாவுக்கு துளியும் இதில் விருப்பமில்லையாம். இதனால் சில லட்சங்களே கிடைத்தாலும் பெங்களூரில் தயாரிப்பாளர்கள் செலவில் தங்கியிருந்து கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் மீனா.


Click it and Unblock the Notifications











