»   »  மீனாவின் கன்னட காதல்!

மீனாவின் கன்னட காதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்னக் கண்ணழகி மீனாவுக்கும், கன்னட நடிகர் சுதீப்புக்கும் இடையே காதல் மலர்ந்து, கல்யாணத்தை நோக்கிசென்று கொண்டிருப்பதாக செய்திகள் கிளம்பியுள்ளன.

ரஜினி அங்கிளுடன் சின்னப் பொண்ணாக நடிக்க ஆரம்பித்து அதே ரஜினியுடன் ஜோடியாகவும்அமர்க்களப்படுத்தி, தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் பெரிய ரவுண்டு அடித்தவர் மீனா.

தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும்முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. சமீப காலமாக மீனாவுக்கு மார்க்கெட் அவ்வளவு பிரமாதமாக இல்லை.

அங்கும் இங்குமாக ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். டிவி தொடரில் தற்போது தலை காட்டத்தொடங்கியிருக்கும் மீனாவுக்கு கல்யாணத்தை முடித்து விட அவரது அம்மா மல்லிகா படு தீவிரமாக மாப்பிள்ளைபார்த்து வருகிறார். சமீபத்தில் கூட மலேசியாவைச் சேர்ந்த ஒரு மாப்பிள்ளையை பார்த்து இறுதி செய்து விட்டதாககூட செய்திகள் வந்தன.

ஆனால் இப்போது இன்னொரு செய்தி கசிய ஆரம்பித்துள்ளது. அதாவது கன்னடத்து இளம் நடிகர் சுதீப்புக்கும்,மீனாவுக்கும் டீப்பான காதல் என்பதுதான் அந்த சுவாரஸ்ய செய்தி.

கன்னட திரையுலகின் ரீமேக் நாயகன் சுதீப். தமிழில் சூப்பர் ஹிட் ஆன பல படங்களை அங்கே சுதீப்பை வைத்துரீமேக் செய்து ஹிட் ஆக்கியுள்ளனர். கமலின் சிப்பிக்குள் முத்து, அஜீத் நடித்த வாலி, சேரனின் ஆட்டோகிராப்என பல ஹிட் தமிழ்ப் படங்களின் ரீமேக்கில் சுதீப் நடித்துள்ளார்.

பார்ப்பதற்கு படு ஸ்மார்ட் ஆகவும் (கன்னட திரையுலக வழக்கத்திற்கு விரோதமாக!) இருப்பார் சுதீப். சிப்பிக்குள்முத்து ரீமேக்கில் சுதீப்புடன் மீனாவும் இணைந்து நடித்தார். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் துளிர்க்கஆரம்பித்ததாக கூறுகிறார்கள்.

பின்னர் ஆட்டோகிராப்பில் மீண்டும் இணைந்தனர். சினேகா நடித்த வேடத்தை மீனா செய்தார். அப்போது காதல்இறுகியதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையிலான காதல் வலுவாகியிருப்பதாகவும், இரு வீட்டாரும் இந்தக்காதலுக்கு பச்சைக் கொடி காட்டும் ஸ்டேஜில் இருப்பதாகவும் தெரிகிறது.

விரைவில் இருவரது கல்யாணச் செய்தியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவும் எனவும் பெங்களூர்வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. ஆனால் இந்த செய்தியை மீனாவிடம் கேட்டால், கண்களை அகல விரித்துஆச்சரியம் காட்டுகிறார்.

அப்படியா, எனக்கே தெரியாதே, எங்களுக்குள் எதுவும் இல்லையே, அப்புறம் எப்படி கல்யாணம் என்று கண்கள்சிரிக்க மறுக்கிறார் மீனா. இருந்தாலும், மீனா-சுதீப் காதல் நெசம்தான் என்கிறார்கள் கன்னடத் திரையுலகினர்.இந்தக் காதல் குறித்து சுதீப் தரப்பு எதையும் சொல்லவில்லை.

அப்பா தெலுங்கர், அம்மா மலையாளி, வாழ்க்கை கொடுத்தது தமிழ், கல்யாணம் கன்னடத்தில்!

அசத்துங்க மீனா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil