»   »  திருமணத்துக்கு தயாராகும் மீனா

திருமணத்துக்கு தயாராகும் மீனா

Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்பதாலும், வயதைக் குறைத்துக் காட்டுவதற்காகவும் வெளி நிகழ்ச்சிகளில் படுகவர்ச்சியாக வரத் தொடங்கியுள்ளார் மீனா.

ரஜினி, கமல், சரத்குமார்,அர்ஜூன் என வயதான பார்ட்டிகளுடன் அதிகம் நடித்து, நடித்து மீனாவை இளவட்டஹீரோக்கள் ஒதுக்கி வைத்து விட்டார்கள். விஜய்யுடன் ஒரு பாட்டு, அஜீத்துடன் ஒரு படம் என குறுகியவட்டத்திலேயே அவரது இளவட்ட ஹீரோக்களுடனான தொடர்பு இருந்து வந்தது.

இப்போது வயதான ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பும் குறைந்து போய் விட்டது. இந்த வருடம் அர்ஜூடன்இவர் நடித்து வெளிவந்த அன்பு சகோதரன், நொந்த சகோதரனாக ஆனது. பிரஷாந்துடன் நடித்த ஷாக் படத்தின்வசூலும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் புது வாய்ப்புக்கள் ஏதும் வரவில்லை.

சமீபகாலமாகவே, திரைத் துறையின் முக்கியப் புள்ளிகளின் பார்வை மீண்டும் தன் மீது பட வேண்டும் என்பதற்காகபட விழாக்கள், வெளி விழாக்களில் ஒன்றுவிடாமல் கலந்து கொண்டு வருகிறார் மீனா. மிகக் கவர்ச்சிகரமானடிரஸ்ஸில், ஆளை அப்படியே காட்டும் டிரான்ஸ்பரன்ட் சேலைகளில் வந்து கலக்கி வருகிறார்.

கல்யாணத்துக்கு முன், நியூ படத்தில் சிம்ரன் போட்ட ஆட்டம் போல் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு, தமிழ் ரசிகர்களுக்குகுட் பை சொல்லலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் மீனா.

அத்தகைய வாய்ப்பைப் பெற கம்பெனிகளுக்கு போன் மேல் போன் போட்டு வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் மீனா. இருந்தாலும் வாய்ப்புக்கள் ஏதும் இல்லை.

இது ஒருபுறமிருக்க, மீனாவை சின்னத்திரைக்கு கொண்டு செல்லும் முயற்சியும் ஒரு பக்கம் நீண்ட நாட்களாகவேநடக்கிறது. ஆனால் மீனாவுக்கு அதில் விருப்பமில்லையாம். இந் நிலையில் மீனாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும்படலத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார் அம்மா மல்லிகா.

கல்யாணத்துக்குப் பிறகு டிவி சீரியல்களில் மீனா நடிக்கலாம் என்கிறார்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil