ரெட்டை ஜடை.. சின்ன பொண்ணாவே மாறிய மீனா.. கூட அந்த நடிகையும் க்யூட்டா இருக்காங்களே!
சென்னை: சமீபத்தில் தன்னை பற்றிய வதந்திகள் மோசமாக சோஷியல் மீடியாவில் உலா வந்த நிலையில், காட்டமான பதிலை கொடுத்திருந்த நடிகை மீனா சூப்பர் கூல் மோடுக்கு மாறியுள்ள வீடியோ ஒன்றை தற்போது நடிகை சங்கீதா கிருஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குழந்தை பருவத்திலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், பார்த்திபன், சரத்குமார், விஜயகாந்த், மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

47 வயதை கடந்த நடிகை மீனா இரட்டை ஜடை போட்டுக்கொண்டு உதட்டை குவித்து வைத்து முத்தம் தருவது போன்ற போஸ் கொடுத்து எடுத்துள்ள வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
மிகப்பெரிய சாதனை: குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்துடன் சில படங்களில் நடித்த மீனா எஜமான், முத்து உள்ளிட்ட படங்களில் அவருடன் ஜோடி போட்டு நடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. லேட்டஸ்டாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த படத்திலும் மீனா ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகை மீனாவை பாராட்டும் விதமாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
விஷமாக பரவிய வதந்தி: மத்திய அமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு நடிகை மீனா இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்று வந்ததாகவும், அதை வைத்து தவறாக கோர்த்து விட்டு தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர் என பயில்வான் ரங்கநாதன் மீனா குறித்து வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
முட்டாள்கள் என திட்டிய மீனா: வீண் வதந்திகளை பரப்புபவர்கள் முட்டாள்கள் என நடிகை மீனாவும் இந்த விவகாரம் தொடர்பாக காட்டமாக ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். நடிகை குஷ்பு மீனாவின் பதிவுக்கு கீழ் கமெண்ட் போட்டு ஆதரவு தெரிவித்தார்.
சங்கீதாவுடன் மீனா: இந்நிலையில், நடிகை சங்கீதா மீனாவுடன் ரெட்டை ஜடை போட்டுக் கொண்டு சின்னப் பொண்ணு போல சேட்டை செய்யும் செம க்யூட்டான வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு எக்கச்சக்கமான லைக்குகள் குவிந்து வருகின்றன.
இறுக்கி அணைச்சு ஒரு உம்மா: நடிகை மீனாவும் சங்கீதாவும் முத்தம் கொடுப்பது போல உதட்டை குவித்துக் கொண்டு படு க்யூட்டாக போஸ் கொடுத்த நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுங்க மீனா என முத்து பட ஸ்டைலில் கமெண்ட் போட்டு வருகின்றனர். நீங்க ரெண்டு பேரும் எந்த ஸ்கூல், எந்த ஸ்டாண்டர்ட் படிக்கிறீங்க என குஷ்புவும் கமெண்ட் போட்டு கேள்வி எழுப்பியுள்ளார். கிகி விஜய், சுஜா வருணி என பலர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











