Meena Birthday: அந்த சிரிப்புக்கே ரசிகர்கள் காலி.. 47 வயதிலும் மாஸ் காட்டும் மீனா!

சென்னை: நடிகை மீனாவின் 47வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. குழந்தையில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வரும் மீனா இந்த வயதிலும் முன்னணி நடிகையாக தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

அவரது கணவர் வித்யாசாகர் உயிரிழந்த நிலையில், தனது மகள் நைனிகாவுடன் தனியாக வாழ்ந்து வரும் மீனாவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Meena celebrates her 47th birthday today and she starts her new Malayalam movie

இந்த ஆண்டு நடிகை மீனா தனது பிறந்தநாளை கேரளாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனது படக்குழுவினருடன் கொண்டாடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

47வது பிறந்தநாள்: 1976ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மீனா இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1982ம் ஆண்டு சிவாஜி நடித்த நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா அதே ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் எங்கேயோ கேட்ட குரல் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Meena celebrates her 47th birthday today and she starts her new Malayalam movie

பார்வையின் மறுபக்கம், தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், சுமங்கலி, திருப்பம், அன்புள்ள ரஜினிகாந்த், உயிரே உனக்காக, லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை மீனா.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு நவயுகம் எனும் தெலுங்கு படத்தின் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் ஒரு புதிய கதை படத்தில் நடிகையாக அறிமுகமான மீனா ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் பிரபலமானார்.

Meena celebrates her 47th birthday today and she starts her new Malayalam movie

சூப்பர் ஸ்டார் ஜோடி: 1993ம் ஆண்டு ரஜினிக்கு ஜோடியாக எஜமான் படத்தில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார் மீனா. ரஜினியுடன் குழந்தையாக நடித்த மீனா அவருக்கு ஜோடியாக நடித்தது மிகப்பெரிய சர்ச்சையை அந்த சமயத்தில் கிளப்பியது. ஆனால், தொடர்ந்து வீரா, முத்து உள்ளிட்ட படங்களிலும் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக மீனா நடித்தார்.

அதன் பின்னர் சில காரணங்களுக்காக நடிகர் ரஜினிகாந்த் மீனாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. கமல், மோகன்லால், விஜயகாந்த், சத்தியராஜ், அஜித், விஜய் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் மீனா. கடைசியாக அண்ணாத்த படத்தில் அத்தை பொண்ணு கதாபாத்திரத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.

Meena celebrates her 47th birthday today and she starts her new Malayalam movie

கோடிக்கணக்கில் சொத்து: கணவர் வித்தியாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், தனது மகளுடன் வாழ்ந்து வரும் நடிகை மீனாவுக்கு அதிகபட்சமாக 40 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறுகின்றனர். சென்னையில் நடிகை மீனாவுக்கு பெரிய வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள படம்: மலையாளத்தில் மோகன்லால் உடன் த்ரிஷ்யம் சீரிஸ் படங்களில் நடித்து வந்த மீனா ப்ரோ டாடி படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில், ஆனந்தபுரம் டைரீஸ் எனும் புதிய மலையாள படத்தில் நேற்று இணைந்துள்ளார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார். அந்த படக்குழுவினருடன் தான் இந்த ஆண்டு பிறந்தநாளை மீனா கேரளாவில் கொண்டாடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X