சமந்தா தோத்துடும்..புஷ்பா பாட்டுக்கு 47 வயது நடிகை எப்படி ஆடுறாருன்னு பாருங்க!

சென்னை: கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கணவர் பிரிவு காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட நடிகை மீனாவை மகிழ்விக்க பிரம்மாண்ட நிகழ்ச்சியை யூடியூப் சேனல் ஒன்று நடத்தியது. அந்த விழாவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் 47 வயதாகும் நடிகை மீனா இன்னமும் தொடர்ந்து படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Meena dances for Pushpa 2 song video goes trending

இந்த ஆண்டு கோடை விடுமுறையை கொண்டாட ப்ளூ லகூன் ஐஸ்லாந்துக்கு அவர் சுற்றுலா சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மீனா வெளியிட்டு வருகிறார்.

சமந்தா நடனம்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு நடிகை சமந்தா படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார். புஷ்பா 2 படத்திலும் சமந்தாவின் குத்தாட்டம் இருக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக நடிகை மீனா புஷ்பா பட பாட்டுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மீனா டான்ஸ்: புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான " புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்" பாடலுக்கு நடிகை மீனா வெளிநாட்டில் சுற்றுலா செய்து வரும் நிலையில், அல்லு அர்ஜுன் போலவே காலைத்தூக்கி ஆடிய வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

புஷ்பா 2: இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளியான குண்டூர் காரம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் டோலிவுட்டுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாஸ் vs அல்லு அர்ஜுன்: இந்த ஆண்டு பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. அதன் பின்னர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியாகிறது. இந்த 2 பெரிய படங்களில் எந்த படம் அதிக வசூல் வேட்டையை அள்ளும் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வெளிநாட்டு டூர்: நடிகை மீனா சம்மர் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில், பனி நிறைந்த இடத்தில் இருந்து ஐஸ் கட்டிக்கு முத்தம் கொடுப்பது மற்றும் பனி சூழ்ந்த இடத்தில் நடனமாடி வாழ்க்கையை ரசிப்பது என என்ஜாய் செய்து வருகிறார். மீனாவுடன் அவரது மகளும் சென்றுள்ளாரா? அல்லது தோழிகளுடன் மீனா சென்றிருக்கிறாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 47 வயது நடிகை போல தெரியவில்லை என்றும் 30 வயது ஹீரோயின் போல இருக்கீங்க மீனா என பலர் மீனாவுக்கு மேலும் ஐஸ் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X