மீனாவே தோத்துடுவாங்க போல.. மகள் நைனிகா இவ்வளவு அழகா?.. இப்படி வளர்ந்துட்டாங்களே.. அடுத்து நடிப்புதானா?

சென்னை: கோலிவுட்டின் டாப் நடிகையாக வலம் வந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் என பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர்; வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் இடி விழுந்தது மாதிரி சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் மீனாவின் கணவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மீனா; வளர்ந்த பிறகு ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழில் அவர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக அறிமுகமாகி பிறகு ரஜினி, கமல்ஹாசன், அஜித் என டாப் முதல் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அழகு, திறமை என அத்தனையும் இருந்ததால் அவரை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள். அவருடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்று நடிகர்களும் விரும்பினார்கள்.

மற்ற மொழியிலும்: மீனாவிடம் உள்ள ஸ்பெஷாலிட்டியே எந்த ரோலாக இருந்தாலும் அதற்கு அவர் செட் ஆவதுதான். முக்கியமாக அவரது கண்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தமிழில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும். அங்கும் சீனியர் முதல் ஜூனியர் நடிகர்கள்வரை ஜோடி போட்டு நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Meena Daughter Nainika s Latest Photo Goes Viral Fans Say She May Outshine Her Mother in Beauty
Photo Credit:

திருமணம் செய்துகொண்ட மீனா: சினிமாவில் அவருக்கான மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்ததை உணர்ந்த அவர்; கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். வித்யாசாகர் ஒரு தொழிலதிபர் ஆவார். அவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். அவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார் மீனா.

இடிந்துபோன மீனா: கணவரின் உயிரிழப்பு மீனாவுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. இடிந்து போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். எதிலும் கவனம் செலுத்த முடியாம தனிமையில் வாட ஆரம்பித்த அவரை; அவரது தோழிகளான சங்கீதா, கலா, மகேஷ்வரி உள்ளிட்டோர்தான் மீட்டு பழைய நிலைமைக்கு கொண்டுவந்தார்கள் என்பது குறிப்பிடத்தகக்து. இதற்கிடையே மீனாவின் மகள் நைனிகா தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.

ட்ரெண்டாகும் ஃபோட்டோ: அந்தப் படத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார் நைனிகா. எனவே தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்; நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என சொல்லி மீனா அவரை படிப்பில் கவனம் செலுத்த வைத்துவிட்டார். இந்நிலையில் நைனிகாவும், மீனாவும் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதில் நைனிகா பயங்கரமாக வளர்ந்துவிட்டார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ அழகில் மீனாவையே விஞ்சிவிடுவார் போல; நைனிகா ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X