மலையாளத்தில் மீண்டும் ஹீரோயினான மீனா!
கோட்டயம்: த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலுடன் நடித்த மீனா, அடுத்து மம்மூட்டிக்கு ஜோடியாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார்.
தொன்னூறுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த மீனா, பெங்களூர் சாப்ட்வேர் எஞ்ஜினியரைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு செட்டிலானார்.

விடாத சினிமா ஆசை
ஆனால் சினிமா ஆசை அவரை விடவில்லை. மீண்டும் திரையுலகிற்கு வந்தார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். தம்பிக்கோட்டை படத்தில் நடித்தார். தெலுங்கிலும் ஒரு படம் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்புகள் வரவில்லை.

மீண்டும் ஹீரோயின்
இந்த நேரத்தில் அவருக்கு மலையாள பட உலகம் கைகொடுத்துள்ளது. அங்கு கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.

மோகன் லால் ஜோடி
மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்த த்ரிஷ்யம் படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. அந்த படம் ஹிட்டானதை அடுத்து மலையாளத்தில் மீனாவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

மம்மூட்டியுடன்
தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு ஜோடியாக பால்யகாலசகி என்ற படத்தில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











