த்ரிஷ்யம்... தெலுங்கிலும் மீனாதான் நாயகி!
த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுக்கு ஜோடியாக, படத்தினி நாயகியாக நடிக்கிறார் மீனா.
பொதுவாக திருமணமாகி குழந்தை பெற்ற பின், அக்கா, அண்ணி, அம்மா வேடங்களுக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நடிகைகள். ஆனால் மீனா இதில் விதிவிலக்கு. திருமணமாகி, ஒரு குழந்தை பெற்ற பின்பும் அவர் நாயகியாகவே படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

ஹீரோயினாகவே தொடரும் மீனா
திருமணத்துக்குப் பின் அவர் நடித்த மலையாளப் படம் த்ரிஷ்யம். இதில் அவர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் கேரள திரையுலக வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது, வசூல் மற்றும் பாராட்டுகளைக் குவித்ததில்.

ரீமேக்
த்ரிஷ்யம் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். தமிழில் கமல் நடிக்கிறார். கன்னடத்தில் பி வாசு இயக்க, ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

ஸ்ரீப்ரியா
தெலுங்கில் இந்தப் படத்தை ஸ்ரீப்ரியா இயக்குகிறார். வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து வெங்கடேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தொடரும் வாய்ப்புகள்
த்ரிஷ்யம் வெற்றி மீனாவுக்கு மேலும் புதிய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக பால்யகாலசகி படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் த்ரிஷ்யம் தவிர, வேறு ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார். திருமணமான பிறகு தமிழில் அவர் எந்தப் படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











