இனிமே ரஜினி ரசிகர்களுக்கு தில்லானா தில்லானாதான்.. தலைவர் 168ல் இணைந்தார் மீனா!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'தலைவர் 168' படத்தில் நடிகை மீனா இணைந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள 'தலைவர் 168' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். காமெடியனாக சூரி ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார் போன்ற அப்டேட்களை வரிசையாக அறிவித்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது, முத்து படத்திற்கு பிறகு 24 வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியுடன் மீனா நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜாக்பாட்

சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள 'தலைவர் 168' படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. வயதான ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜோதிகா, மஞ்சுவாரியர், குஷ்பு மற்றும் மீனா என பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இறுதியில் அந்த ஜாக்பாட் நடிகை மீனாவுக்கு அடித்துள்ளது.

முத்து மேஜிக்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மீனா 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார் என்ற அப்டேட்டை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. முத்து படம் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் ஜப்பானில் அதிக நாட்கள் ஓடி அங்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கிய படமாகும்.

குசேலனை மறந்தாச்சா

24 வருடங்கள் கழித்து ரஜினியுடன் மீனா நடிக்கவுள்ளார் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் அப்போ குசேலன் படத்தில் மீனா நடித்ததை மறந்து விட்டார்களா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். 2008ம் ஆண்டு வெளியான குசேலன் படத்தில் மீனா பசுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், ஒருவேளை மறைமுகமாக இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார் என்பதைத் தான் அப்படி சொல்கிறார்கள் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அப்போ கீர்த்தி சுரேஷ்

தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார் என்றால், அப்போ கீர்த்தி சுரேஷ் என்ன ரோலில் நடிக்கிறார் என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்த நெட்டிசன் ரஜினிக்கு ஜோடியாக மீனாவும் ரஜினிக்கு மகளாக கீர்த்தி சுரேஷும் நடிப்பார்கள் என கமெண்ட் செய்துள்ளார்.

டிரெண்டிங்

தலைவர் 168 படத்தில் மீனா இடம்பெற்றுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து ட்விட்டர் டிரெண்டிங்கில் மீனா என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியுடன் குழந்தையாக நடித்த மீனா, எஜமான், வீரா மற்றும் முத்து படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தலைவர் 168 படத்தில் மீனாவுக்கு என்ன ரோல் என்பது விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X