என்னோட ஆள் அஜித்தான்.. கண்ணழகி மீனா ஓபன் டாக்.. ஏகே மீது இவ்வளவு ஈர்ப்பா?
சென்னை: கோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக பல வருடங்கள் கோலோச்சியவர் மீனா. இப்போது கேரக்டர் ரோல்களை செய்துவரும் அவர்; கடைசியாக த்ரிஷ்யம் 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக ரவுடி பேபி திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று அஜித்குமார் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வைரலாகியிருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான மீனா; பிறகு ஹீரோயினாக மாறினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சத்யராஜ், விஜயகாந்த் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். அப்படி அவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்த அவர்; பல வருடங்கள் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தார். கோலிவுட்டில் அவரை எப்படி ரசிகர்கள் கொண்டாடினார்களோ அதேபோல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டாப் இடத்தில்தான் அவரை வைத்திருந்தார்கள். அதன் காரணமாக அவரது நாற்காலி யாராலும் அசைக்க முடியாததாகவும் விளங்கியது.

திருமணம் செய்துகொண்ட மீனா: தொடர்ச்சியாக ஹீரோயினாக நடித்தவருக்கு காலம் செல்ல செல்ல வாய்ப்புகள் குறைந்தன. அப்போது வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவரும் விஜய்க்கு மகளாக தெறி படத்தில் நடித்தார். அதற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவே இல்லை. நிலைமை இப்படி இருக்க கொரோனா காலகட்டத்தில் வித்யாசாகர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஈனாவை ரொம்பவே டல் ஆக்கியது. எப்படியோ அவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இழப்பிலிருந்து மீண்டார்.
கேரக்டர் ரோலில் பிஸி: இப்போது அவர் கேரக்டர் ரோல்கள் செய்வதில் பிஸியாகியிருக்கிறார். அந்தவகையில் சீக்ரெட் ஸ்ட்டோரிஸ் - ரோஸ்லின் என்ற வெப் சீரிஸிலும், த்ரிஷ்யம் 3 படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அந்த இரண்டு படைப்புகளுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதேசமயம் மீனாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே வழக்கம்போல் அப்ளாஸ் கிடைத்தது. அடுத்ததாக ரவுடி பேபி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். வேறு சில இயக்குநர்களிடமும் கதை கேட்டிருப்பதாக தெரிகிறது.
ட்ரெண்டாகும் மீனா பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு மீனா பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் தொகுப்பாளினி அவரிடம், 'இந்த ஜெனரேஷனில் அழகான ஹீரோ யார்?' என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மீனா, "எனக்கு யாருமே நியாபகத்துக்கு வரவில்லை. எனக்கு என்னுடைய ஆள் அஜித்தான் நியாபகத்துக்கு வருகிறார். இப்போதுகூட அவர் செம அழகாக இருக்கிறார்" என்றார். அந்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வைரலாகியிருக்கிறது. ஏகே மீது மீனாவுக்கு இவ்வளவு ஈர்ப்பா என்றும் கமெண்ட்ஸ் செய்துவாருகிறார்கள்.
விஜய் கேட்ட கேள்வி: முன்னதாக அஜித்துடன் மீனா ஆனந்த பூங்காற்றே, வில்லன், சிட்டிசன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அவை சூப்பர் டூப்பர் ஹிட்டும் ஆகியிருக்கின்றன. அதேபோல் தெறி பட ஷூட்டிங் சமயத்தில் விஜய்யை மீனா சந்தித்தபோது, 'உங்களுக்கு அஜித்தான் ஃபேவரைட் என்று எனக்கு தெரியும். நீங்கள் என்னுடன் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை' என கேட்டிருக்கிறார். அதேபோல், விஜய்யுடன் ஒரு படத்தில்கூட ஜோடியாக மீனா நடிக்கவில்லை; ஷாஜஹான் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

