தமிழ் சினிமாவிலேயே அழகான கதாநாயகன் அஜீத்தான்!
தமிழ் சினிமாவிலேயே அழகான கதாநாயகன் அஜீத்தான் என்று கூறியுள்ளார், திருமணமாகி குழந்தைப் பெற்று, மீண்டும் பரபரவென நடிக்க ஆரம்பித்துள்ள மீனா.
திருமணத்துக்குப் பின் மீனா முதல் முறையாக மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த படம் த்ரிஷ்யம். இந்தப் படம் 150 நாட்கள் ஓடியது. வசூலிலும் சாதனைப் படைத்தது.

தெலுங்கில்
இதையடுத்து தெலுங்கிலும் இந்த படத்தை ரீமேக் செய்தனர். அங்கு வெங்கடேசும், மீனாவும் ஜோடியாக நடித்தனர். ஆந்திராவிலும் பெரிய வெற்றி பெற்றது. கன்னடத்திலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழில்
தமிழிலும் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் த்ரிஷ்யம் படம் ரீமேக் ஆகி வருகிறது. தமிழ் ரீமேக்கிலும் மீனாவே நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு பதில் கவுதமியை ஒப்பந்தம் செய்து விட்டனர்.

தமிழ் வாய்ப்பு வேணும்
தமிழில் தனக்கான நல்ல வாய்ப்புக்குக் காத்திருக்கிறார் மீனா. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மீனாவிடம் தமிழ் திரையுலகில் அழகான கதாநாயகன் யார்? என்று கேட்டனர்.

அஜீத்தான்..
இதற்கு பதில் அளித்த மீனா, "தமிழ் பட உலகில் அழகான கதாநாயகன் அஜீத். அவர் ரொம்பவும் அழகாக இருக்கிறார்," என்றார்.
அஜீத்துடன் வில்லன், ஆனந்த பூங்காற்றே போன்ற படங்களில் நடித்துள்ளார் மீனா. இன்னொரு வாய்ப்பு வராமலா போகும் என்ற நம்பிக்கைதான்!


Click it and Unblock the Notifications











