என்னது ஹிந்தில பேசணுமா?.. என்னை எதுக்கு கூப்பிட்டீங்க.. உச்சக்கட்ட டென்ஷனான மீனா

சென்னை: மீனா தமிழ் சினிமாவில் ஃபேமஸ் நடிகையாக வலம் வந்தவர். 90களில் அவர் நடித்த ஏராளமான படங்கள் மெகா ஹிட்டாகி அவரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாற்றியது. சூழல் இப்படி இருக்க வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார். இந்தச் சூழலில் தன்னிடம் ஹிந்தியில் பேச சொன்னவர்களை பார்த்து அவர் டென்ஷனான வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் வந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்களில் ரொம்பவே ஃபேமஸாக இருப்பவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த அவர் சிவாஜி, ரஜினி உள்ளிடோருடன் அப்போதே நடித்துவிட்டார். முக்கியமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மீனா குழந்தையாக நடித்தது பலரது பாராட்டை பெற்றது. மிகச்சிறந்த நடிகையாக வருவார் என்று அப்போதே அவர் பெயர் எடுத்துவிட்டார்.

meena iifa tamil cinema

முதல் படமே மெகா ஹிட்: மீனா வளர்ந்த பிறகு தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழிலும் நடிக்க முடிவெடுத்த அவர் ராஜ்கிரண் நடிப்பில் உருவான என் ராசாவின் மனசிலே படத்தில் 1991ஆம் ஆண்டு காலடி எடுத்துவைத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் மீனா சோலையம்மா என்ற கேரக்டரை ஏற்றிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.

முன்னணி ஹீரோயின்: முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தனக்கு கிடைத்த நிறைய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர். அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்ட அவர்; மறுபக்கம் அப்போது வளர்ந்துவந்த நடிகராக இருந்த அஜித் உள்ளிட்டோருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

செம கெமிஸ்ட்ரி: இவர்களில் ரஜினியுடன் மீனாவுக்கு கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. இருவரும் இணைந்து நடித்த முத்து, எஜமான், வீரா ஆகிய படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. முக்கியமாக முத்து திரைப்படம் இந்தியா மட்டுமின்றி ஜப்பானிலும் சக்கைப்போடு போட்டது நினைவுகூரத்தக்கது. நிலைமை இப்படி இருக்க ஒருகட்டத்தில் மீனாவுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அந்த சூழலில் விஜய்யுடன் ஷாஜகான் படத்தின் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி ஆச்சரியப்படுத்தினார்.

திருமணம்: பிறகு வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவரும் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார். அதற்கு பிறகு நடிக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உயிரிழந்தார். அந்த உயிரிழப்பு மீனாவை ரொம்பவே பாதித்தது. ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்த அவர் இப்போது நார்மலாக இருக்கிறார்.

டென்ஷனான மீனா: இந்நிலையில் சினிமா விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார் மீனா. அப்போது பேசிய அவரிடம் ஹிந்தியில் பேசுங்கள் என்று செய்தியாளர்கள் கூறினர். அதற்கு டென்ஷனான மீனா, "ஹிந்தியில்தான் பேச வேண்டும் என்றால் எதற்காக என்னை கூப்பிட்டீர்கள். தென்னிந்தியர்கள் மட்டும்தான் வருகிறார்கள் என்று நினைத்தேன்" என சொல்லிவிட்டு, "தென்னிந்திய மொழி படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் ரொம்பவே பெருமைப்படுகிறேன்" என கூறிவிட்டு சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X