நடிப்பைவிட்டு டப்பிங் பக்கம் வரும் மீனா!
நடிகைகளில் மிகப்பெரிய உச்சத்தைப் பார்த்தவர் மீனா. ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆஸ்தான நாயகி என்ற அந்தஸ்துடன் திகழ்ந்தவர். இப்போது திருமணமாகி செட்டிலாகிவிட்டாலும், மீனாவின் பெயரைச் சொன்னதும் இளமையைவிட்டு வெளியேறும் விளிம்பில் இருப்பவர்களும் கூட சற்றே கிறக்கத்துடன் ப்ளாஷ்பேக்குக்குப் போவார்கள்.

குழந்தையாக தொடங்கி குமரி வரை...
குழந்தை நட்சத்திரமாக தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், சில ஆண்டுகளில் கிடுகிடுவென வளர்ந்து அவருக்கே ஜோடியானார். தமிழ் சினிமாவின் மிகப் பொருத்தமான ஜோடி என்ற பெயரும் அவர்களுக்குக் கிடைத்தது.

அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும்...
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தவர் என்ற பெருமை மீனாவுக்கு உண்டு. கமலுடன் அவ்வை சண்முகி, தெனாலியில் நடித்தார்.
அஜீத், விஜய், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் என அத்தனைபேரும் இவருடன் ஜோடி போட்டு விட்டார்கள்.

நடிப்பு போதும்..
எதற்கு இத்தனை பீடிகை என்கிறீர்களா... அம்மணி இப்போது நடிப்பிலிருந்து டப்பிங்குக்கு தாவிவிட்டாராம். அவரது இந்தப் புதிய முடிவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாம் கோடம்பாக்கத்தில்.

ஆன்ட்டி என்றாலும் ஓகே...
அதே நேரம், ஆன்டியானாலும் பரவால்ல... அம்சமான ஆன்டியா நடிச்சிக்கிட்டே இருக்கலாமே என அவரது ரசிக இயக்குநர்கள் சிலரும் அட்வைஸ் பண்ணியிருக்கிறார்களாம். அட இது நல்ல வழியா இருக்கே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மீனா... எந்த வேஷத்துக்கும் ரெடி என்று கூறி களமிறங்கியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











