அட செம க்யூட்டா இருக்காங்களே.. மீனா பகிர்ந்த புகைப்படங்கள்.. ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்
சென்னை: நடிகை மீனா 90களில் கோலிவுட், டோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கியவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். கண்ணழகி மீனா என்றும் அவரை அழைப்பதுண்டு. அவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கணவர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதன் காரணமாக மீனா எல்லோருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதன் பிறகு தமிழில் ராஜ் கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மீனா. அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக மீனா சோலையம்மா என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார்.

கனவுக்கன்னி மீனா: என் ராசாவின் மனசிலே படத்துக்கு பிறகு மீனாவுக்கு தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ரஜினி, கமல், சரத்குமார்,சத்யராஜ் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்தார் மீனா. இதன் காரணமாக பல வருடங்கள் தென் மாநிலங்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தார்.
ரஜினி கெமிஸ்ட்ரி: மீனா எத்தனை ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் அவருக்கு இருந்த கெமிஸ்ட்ரி மற்ற ஹீரோக்களிடம் குறைவாகவே இருந்ததாக பெரும்பாலான ரசிகர்கள் கூறினர். இருவரும் நடித்த எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. ரஜினிக்கு மீனா ஜோடியாக நடிக்கும் முன்பே குழந்தை நட்சத்திரமாக அவருடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறார். அவர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்தார்.மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் வித்யாசாகர் மரணத்தை மீனா எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக மீனா சோகத்தின் உச்சத்துக்கே சென்றார். தொடர்ந்து அவருடன் நடித்தவர்கள் மீனாவை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
குழந்தையும் நடிகை: மீனா போன்றே அவரது மகளான நைனிகாவும் சினிமாவில் நடித்திருக்கிறார். முதல் படமே விஜய்யுடன் தெறி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை அதற்கு பிறகு நைனிகா நடிக்கவில்லை. அதற்கு காரணம் அவரது படிப்புதான் என மீனா சில பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார்.
ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: இந்நிலையில் மீனா ப்ளு லகூன் ஐஸ்லாந்துக்கு சென்றிருக்கிறார். ப்ளூ லகூன் ஐஸ்லாந்து உலக மக்களால் அதிகம் விரும்பக்கூடிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு கால நிலை அருமையாக இருக்கும் என்பதால் பலரும் அங்கு செல்வார்கள். இப்போது மீனா அங்கு சென்று பனிக்கட்டியை கையில் வைத்திருக்கும்படியும், ஐஸ்லாந்தில் தான் சுற்றி பார்த்த இடங்களில் நின்றபடியும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அவை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











